Saturday, August 31, 2013

"தியான மையத்தில் சாமியாரின் ஆபாச லீலைகள்,, - PART XXX

ஆந்திராவில் தியான மையம் நடத்தும் சாமியார் ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.







ஆந்திர மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கட்தால் என்ற இடத்தில் 65 வயது மதிக்கத்தக்க சுபாஷ் பத்ரிஜி என்ற சாமியார் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தியான மையம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இங்கு பிரமிடு வடிவில் பிரமாண்டமான தியான மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கர்னூல் மாவட்டம் ஜெகநாதகட்டு என்ற இடத்திலும் இவர் தியான மையம் நடத்தி வருகிறார்.

கட்தாலில் உள்ள மையத்தில் தியானம் கற்றுக்கொள்வதற்காக ஆந்திராவில் இருந்து மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வார்கள். இங்கு நடந்த தியான விழாவுக்கு முக்கிய பிரமுகர்கள் சிலரும் வந்து இருக்கிறார்கள்.

இந்த தியான மையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை உலக தியான மகாசபை கூட்டங்கள் நடைபெற்றன.

இங்கு நடந்த தியான நிகழ்ச்சியை தனியார் செய்தி சேனல் ஒன்று ரகசியமாக படம் பிடித்து டெலிவிஷனில் ஒளிபரப்பியது. தியானத்துக்கு வந்த பெண்களை சாமியார் சுபாஷ் பத்ரிஜி கட்டி அணைப்பது, முத்தமிடுவது, மடியில் உட்கார வைப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாயின. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
தியானம் என்ற பெயரில் சாமியார் ஆபாசமாக நடந்து கொண்டதை பார்த்த கட்தால் பகுதி மக்கள் ஏராளமான பேர் தியான மையத்தின் முன்பு திரண்டு சாமியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பிய செய்தி சேனலின் கேமராமேன் மற்றும் ஊழியர்களை தியான மையத்தின் நிர்வாகிகள் அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து, அந்த டி.வி. நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் பத்ரிஜி சாமியார் மற்றும் தியான மைய நிர்வாகிகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதை அறிந்ததும் சாமியாரும், தியான மைய நிர்வாகிகளும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சாமியார் சுபாஷ் பத்ரிஜி பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விதம் குறித்து பெண்கள் புகார் செய்ததையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மகபூப்நகர் மாவட்ட கலெக்டர் கிரிஜா சங்கர், போலீஸ் சூப்பிரண்டு நாகேந்திர குமார் ஆகியோருக்கு ஆந்திர மாநில உள்துறை மந்திரி சபிதா இந்திராரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.




இதேபோல் சோமராஜூ என்ற வக்கீல் மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்து இருக்கிறார். அதன்பேரில் சாமியார் சுபாஷ் பத்ரிஜியின் தியான மையத்தில் நடந்த என்ன? என்பது பற்றி விசாரித்து வருகிற 18-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கும், போலீஸ் சூப்பிரண்டுக்கும் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது.  


நாதாரித் தனத்தை நாசுக்காக செய்யத் தெரியாத நம்மவர்கள்




கடத்தல் நாடகமாடிய அனுமன் சேனா  தலைவன்

கோவை: 




கோவையில் அனுமன் சேனா மாநில அவைத் தலைவன் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். தம்மை மர்ம நபர் கடத்தியதாக கூறி போலீசை அலைக்கழித்ததாக அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடத்தல் நாடகமாடிய சக்திவேல் போலீசார் அவனைத்தேடி அலைந்தபோது தனது நண்பர் ராமராஜுடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று பல இடங்களில் சுற்றி பார்த்துள்ளான். அதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு சக்திவேல் சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.அதேபோல அவர் சுசீந்திரம் கோவிலுக்கு சென்றதும் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.

மேலும் சக்திவேல் தனது நண்பருடன் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளான். இது தொடர்பாக அரசு பஸ் கண்டக்டரிடம் விசாரித்து அதற்கான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்தனர். இவற்றின் அடிப்படையில் சக்திவேலை போலீசார் கைதுசெய்தனர். அவர் மீது பொய்யான தகவல் கொடுத்தல்,பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான சக்திவேல் கோவை மத்திய சிறையில்   அடைக்கப்பட்டான்.





பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ்காரன் தன் மனைவியின் வேட்பு மனுவில்தான் ஏமாற்றினான், ஆனால் நாமோ, நம்து மனைவியையே கொல்ல துணிந்துவிட்டோம், அந்த நேரத்தில் அவர் மனைவி நகராமல் இருந்திருந்தால் அப்பெண்ணிண் நிலை என்னவாகும் யோசித்து பாருங்கள் இந்த அவலநிலை தேவையா ? இப்படி நம் வீட்டு பெண்களை கொன்றுதான் நமக்கு பிரபலயம் வேண்டுமா ? சிந்திப்பீர்!


மனைவிமார்களே! பெண்களே! உஷார்! உஷார் !! உஷார்!!!