கோவை:
கோவையில் அனுமன் சேனா மாநில அவைத் தலைவன் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். தம்மை மர்ம நபர் கடத்தியதாக கூறி போலீசை அலைக்கழித்ததாக அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் நாடகமாடிய சக்திவேல் போலீசார் அவனைத்தேடி அலைந்தபோது தனது நண்பர் ராமராஜுடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று பல இடங்களில் சுற்றி பார்த்துள்ளான். அதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு சக்திவேல் சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.அதேபோல அவர் சுசீந்திரம் கோவிலுக்கு சென்றதும் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.
மேலும் சக்திவேல் தனது நண்பருடன் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளான். இது தொடர்பாக அரசு பஸ் கண்டக்டரிடம் விசாரித்து அதற்கான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்தனர். இவற்றின் அடிப்படையில் சக்திவேலை போலீசார் கைதுசெய்தனர். அவர் மீது பொய்யான தகவல் கொடுத்தல்,பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான சக்திவேல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
காங்கிரஸ்காரன் தன் மனைவியின் வேட்பு மனுவில்தான் ஏமாற்றினான், ஆனால் நாமோ, நம்து மனைவியையே கொல்ல துணிந்துவிட்டோம், அந்த நேரத்தில் அவர் மனைவி நகராமல் இருந்திருந்தால் அப்பெண்ணிண் நிலை என்னவாகும் யோசித்து பாருங்கள் இந்த அவலநிலை தேவையா ? இப்படி நம் வீட்டு பெண்களை கொன்றுதான் நமக்கு பிரபலயம் வேண்டுமா ? சிந்திப்பீர்!
மனைவிமார்களே! பெண்களே! உஷார்! உஷார் !! உஷார்!!!




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.