Saturday, August 31, 2013

"தியான மையத்தில் சாமியாரின் ஆபாச லீலைகள்,, - PART XXX

ஆந்திராவில் தியான மையம் நடத்தும் சாமியார் ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.







ஆந்திர மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கட்தால் என்ற இடத்தில் 65 வயது மதிக்கத்தக்க சுபாஷ் பத்ரிஜி என்ற சாமியார் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தியான மையம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இங்கு பிரமிடு வடிவில் பிரமாண்டமான தியான மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கர்னூல் மாவட்டம் ஜெகநாதகட்டு என்ற இடத்திலும் இவர் தியான மையம் நடத்தி வருகிறார்.

கட்தாலில் உள்ள மையத்தில் தியானம் கற்றுக்கொள்வதற்காக ஆந்திராவில் இருந்து மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வார்கள். இங்கு நடந்த தியான விழாவுக்கு முக்கிய பிரமுகர்கள் சிலரும் வந்து இருக்கிறார்கள்.

இந்த தியான மையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை உலக தியான மகாசபை கூட்டங்கள் நடைபெற்றன.

இங்கு நடந்த தியான நிகழ்ச்சியை தனியார் செய்தி சேனல் ஒன்று ரகசியமாக படம் பிடித்து டெலிவிஷனில் ஒளிபரப்பியது. தியானத்துக்கு வந்த பெண்களை சாமியார் சுபாஷ் பத்ரிஜி கட்டி அணைப்பது, முத்தமிடுவது, மடியில் உட்கார வைப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாயின. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
தியானம் என்ற பெயரில் சாமியார் ஆபாசமாக நடந்து கொண்டதை பார்த்த கட்தால் பகுதி மக்கள் ஏராளமான பேர் தியான மையத்தின் முன்பு திரண்டு சாமியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பிய செய்தி சேனலின் கேமராமேன் மற்றும் ஊழியர்களை தியான மையத்தின் நிர்வாகிகள் அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து, அந்த டி.வி. நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் பத்ரிஜி சாமியார் மற்றும் தியான மைய நிர்வாகிகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதை அறிந்ததும் சாமியாரும், தியான மைய நிர்வாகிகளும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சாமியார் சுபாஷ் பத்ரிஜி பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விதம் குறித்து பெண்கள் புகார் செய்ததையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மகபூப்நகர் மாவட்ட கலெக்டர் கிரிஜா சங்கர், போலீஸ் சூப்பிரண்டு நாகேந்திர குமார் ஆகியோருக்கு ஆந்திர மாநில உள்துறை மந்திரி சபிதா இந்திராரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.




இதேபோல் சோமராஜூ என்ற வக்கீல் மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்து இருக்கிறார். அதன்பேரில் சாமியார் சுபாஷ் பத்ரிஜியின் தியான மையத்தில் நடந்த என்ன? என்பது பற்றி விசாரித்து வருகிற 18-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கும், போலீஸ் சூப்பிரண்டுக்கும் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது.  


நாதாரித் தனத்தை நாசுக்காக செய்யத் தெரியாத நம்மவர்கள்




கடத்தல் நாடகமாடிய அனுமன் சேனா  தலைவன்

கோவை: 




கோவையில் அனுமன் சேனா மாநில அவைத் தலைவன் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். தம்மை மர்ம நபர் கடத்தியதாக கூறி போலீசை அலைக்கழித்ததாக அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடத்தல் நாடகமாடிய சக்திவேல் போலீசார் அவனைத்தேடி அலைந்தபோது தனது நண்பர் ராமராஜுடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று பல இடங்களில் சுற்றி பார்த்துள்ளான். அதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு சக்திவேல் சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.அதேபோல அவர் சுசீந்திரம் கோவிலுக்கு சென்றதும் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.

மேலும் சக்திவேல் தனது நண்பருடன் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளான். இது தொடர்பாக அரசு பஸ் கண்டக்டரிடம் விசாரித்து அதற்கான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்தனர். இவற்றின் அடிப்படையில் சக்திவேலை போலீசார் கைதுசெய்தனர். அவர் மீது பொய்யான தகவல் கொடுத்தல்,பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான சக்திவேல் கோவை மத்திய சிறையில்   அடைக்கப்பட்டான்.





பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ்காரன் தன் மனைவியின் வேட்பு மனுவில்தான் ஏமாற்றினான், ஆனால் நாமோ, நம்து மனைவியையே கொல்ல துணிந்துவிட்டோம், அந்த நேரத்தில் அவர் மனைவி நகராமல் இருந்திருந்தால் அப்பெண்ணிண் நிலை என்னவாகும் யோசித்து பாருங்கள் இந்த அவலநிலை தேவையா ? இப்படி நம் வீட்டு பெண்களை கொன்றுதான் நமக்கு பிரபலயம் வேண்டுமா ? சிந்திப்பீர்!


மனைவிமார்களே! பெண்களே! உஷார்! உஷார் !! உஷார்!!!






Wednesday, May 22, 2013

உல்லாசத்தை பார்த்ததால் ஆத்திரம் : 8 வயது சிறுவன் வெட்டி கொலை


சூளகிரி : 

எட்டு வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். சிறுவனின் அண்ணியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடியை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (50). இவரது மனைவி மாதம்மாள் (45). இவர்களது மூத்தமகன் சங்கர் (25). மருமகள் கலா (24). வீட்டின் பின்புறம் வசித்து வருகின்றனர். திம்மராயப்பாவின் கடைசி மகன் சதீஷ் (8). அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்தான்.  நேற்று பள்ளிவிடுமுறை என்பதால் வீட்டின் பின்புறம் சதீஷ் விளையாடிக் கொண்டிருந்தான். 

இந்நிலையில் மாலை 6 மணியை தாண்டியும் மகன் வீட்டுக்கு வராததால் மாதம்மாள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருகில் உள்ள தோட்டத்தில் சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து ரத்தம் வழிந்ததை பார்த்த அப்பகுதியினர், மூட்டையைப் பிரித்து பார்த்தனர். அதில் சதீஷ் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவனது தலையின் பின்புறம் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. தகவல் அறிந்து வந்த பெற்றோர் சிறுவனின் உடலைப் பார்த்து கதறினர். தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், சங்கர் வீட்டின் முன் சுற்றி வந்து குரைத்தது. பின்னர் வீட்டின் முன் படுத்துக்கொண்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


சிறுவனின் அண்ணி கலாவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவனை கலாவும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: 

சதீஷின் அண்ணி கலாவிற்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சங்கர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று பிற்பகலில், கலா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். 


இதனை சதீஷ் பார்த்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த கலா மற்றும் அவரது கள்ளக்காதலன், சதீஷ் யாரிடமாவது சொல்லி விட்டால் பிரச்னையாகி விடும் என்று அச்சம் அடைந்து அவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச்சென்று அவன் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். 

இதில் சதீஷ் துடிதுடித்து இறந்துள்ளான். இதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை சாக்குப்பையில் போட்டு கட்டி, அருகில் உள்ள தோட்டத்தில் வீசி உள்ளனர்.

கள்ளக்காதலை மறைக்க மனைவி குத்திக் கொலை


சென்னை: 

இளம்பெண் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொன்று புதைத்தது தெரிய வந்தது. கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க மனைவியை கொன்று புதைத்துவிட்டு  காணாமல் போனதாக நாடகமாடியதாக அவர் போலீசில் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த காளிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (32). சென்னையை அடுத்த படப்பையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி  (23). மனைவியை சொந்த ஊரான காளிபாளையத்திலேயே விட்டுவிட்டு, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, கல்லூரிக்கு நடராஜன் சென்று வந்துள்ளார். 



இந்நிலையில் கடந்த மாதம் 6ம் தேதி சேலத்தில் தோழி வீட்டு திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விஜயலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என பரமத்திவேலூர் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தார். அதேநேரத்தில் வரதட்சணை கேட்டு நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் விஜயலட்சுமியை கடத்தி சென்றுவிட்டதாக அவரது தந்தை சுப்பிரமணி யனும் புகார் அளித்தார். 3 தனிப்படை அமைத்து விஜயலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். நடராஜனிடமும் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி நாமக்கல் கோர்ட்டில் நடராஜன் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை நடராஜன் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

மோகனூர் அருகில் உள்ள அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமியுடன் நடராஜனுக்கு 2010ம் ஆண்டு நவம்பரில் திருமணம் நடந்தது. விஜயலட்சுமி ஆசிரியை வேலைக்காக காத்திருந்தார். அவரை சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு  நடராஜன் மட்டும் பூந்தமல்லி அருகில் உள்ள காட்டுப்பாக்கத்தில் தனியாக வசித்தார். அவருக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.

மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்இ முடித்துவிட்டு பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர் குப்பம் தனியார் கல்லூரியில் முதலில் வேலை செய்துள்ளார். பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் கல்லூரி நிர்வாகம் நடராஜனை  வேலையைவிட்டு நீக்கிவிட்டது. இதையடுத்து படப்பைக்கு வந்துள்ளார். அந்த கல்லூரியிலும் பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.



ஊருக்கு செல்லும்போதெல்லாம் விஜயலட்சுமியை வக்கிரமான முறையில் செக்ஸில் ஈடுபட கட்டாயப்படுத்தி உள்ளார். இது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. 


மனைவியை நடராஜன் வெறுக்க தொடங்கி னார். அவரை சென்னைக்கு அழைத்து செல்லாமல் காலம் கடத்தி வந்தார். ஆனால் விஜயலட்சுமியோ, தன்னை சென்னைக்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 6ம் தேதி விஜயலட்சுமிக்கு போன் செய்த நடராஜன், ‘சேலத்தில் தோழி திருமணத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்னைக்கு வா என கூறியுள்ளார். அதன்படி விஜயலட்சுமியும் சென்னை சென்றுள்ளார். நடராஜன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற விஜயலட்சுமிடம் ‘நீங்கள் யார்? என வீட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார்.

நான்தான் நடராஜனின் மனைவி என கூறியிருக்கிறார். ‘அப்படியானால் கடந்த 3 ஆண்டுகளாக இருந்த பெண் யார்? என வீட்டு உரிமையாளர் கேட்டுள்ளார். அப்போதுதான் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது விஜயலட்சுமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து கணவரிடம் கேட்டு விஜயலட்சுமி சண்டை போட்டுள்ளார். 3 ஆண்டுகளாக அவருடன் குடும்பம் நடத்தியது கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லு£ரி மாணவி என்பதும் அந்த மாணவி தற்போது பெங்களூரில் தனியார் கம்பெனியில்  வேலை செய்து வருவது தெரியவந்தது. கணவரிடம் கோபித்து கொண்டு விஜயலட்சுமி ஊருக்கு புறப்பட்டார். ஊருக்கு சென்றால் கள்ளக்காதல் விவகாரத்தை தனது பெற்றோரிடம் கூறிவிடுவாள் என பயந்த நடராஜன் மனைவியை கொல்ல திட்டமிட்டார். அவரை சமாதானப்படுத்தி வீட்டில் தங்க வைத்துள்ளார். 2 நாள் கழித்து இரவு நேரத்தில், வாக்கிங் செல்லலாம் என கூறி மனைவியை காட்டுப்பாக்கம் செல்லியம்மன் நகர், கிருஷ்ணா கால்வாய் மணல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றபோது, தயாராக வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை குத்தியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்துள்ளார். 

முதல் நாள் இரவே வெட்டி வைத்திருந்த குழியில் மனைவியின் சடலத்தை போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு  திரும்பியுள்ளார். கடந்த மாதம் 6ம் தேதி மனைவியை கொலை செய்துவிட்டு தன் மேல் போலீசார் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக 8ம் தேதி மனைவியை காணவில்லை என நாடகமாடி, போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசாரின்  சந்தேகம் தன் மீது திரும்பியது தெரிந்ததும் கோர்ட்டில் சரண் அடைந்து விட்டதாக வாக்குமூலத்தில் நடராஜன் கூறியுள்ளார். பரமத்திவேலூர் டிஎஸ்பி உதயகுமார், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார், நடராஜனை நேற்று சென்னை அழைத்து வந்தனர்.


விஜயலட்சுமி சடலத்தை இன்று தோண்டி எடுத்து பூந்தமல்லி தாசில்தார் வளர்மதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்வார்கள் என்று தெரிகிறது.


கசக்கும் இல்லறம்! இனிக்கும் கள்ள உறவு! தலைகீழாகும் இந்து மத கலாச்சாரம்!



சம்பவம்-1 : 

தேவராஜ்-கலைச்செல்வி தம்பதிகளுக்கு ஆணும் பெண்ணுமாய் இரண்டு அழகிய பிள்ளைகள். வடமாவட்ட தலைநகரம் ஒன்றில் சந்தோசமாக வாழ ஆரம்பித்தார்கள். பிள் ளைகளை நல்லமுறை யில் படிக்க வைக்க ஆசைப்பட்ட தேவராஜ்... ஃபாரினுக்குப் போனார். கடுமையாக உழைத்தார். வியர்வைத் துளிகளைத் தங்கக்காசு களாக மாற்ற ஆரம்பித் தார். இப்படி திரைகட லோடிச் சம்பாதித்த செல்வத்தை எல்லாம்... தன் மனைவி பெயரில்... வீடு நிலபுலன்கள் என வாங்கிப் போட்டு தமிழகத்தில் முத லீடாக்கினார். பிளாட் வாங்கி மாடிவீடும் கட்டினார்.

மகள் கல்லூரிக்குப் போக... மகன் பள்ளிப் படிப்பைப் படித்துவந்தான். இந்த நிலையில்.... இரண்டு வாரங்களுக்கு முன் மகளின் கல்லூரிக் கட்டணத்துக்காக நகைகளை அடமானம் வைத்து வருவதாகச் சொல்லி... இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற கலைச்செல்வி.. வீடு திரும்பவில்லை. பரிதவித்துப்போன தேவராஜும் அவரது பிள்ளைகளும் கலைச்செல்வியை பதட்டத் தோடு தேடினர். எந்தத் தகவலும் இல்லாததால்.. பயந்துபோன அந்தக் குடும்பம்... காவல் நிலையத்துக்குப் போனது.

"என் மனைவி ரொம்ப வெளி உலகம் தெரி யாதவ. அவ அடமானம் வைக்கப்போன நகை களைக் காணாப்போட்டுட்டாளோ என்னவோ. பயந்துபோய் வீடு திரும்பலை போலிருக்கு. நகை போனாப்போகுது. எங்களுக்கு என் மனைவி கலைச்செல்வி பத்திரமா வந்தாலே போதும்ங்க'’என்று தேவராஜ் கண்கலங்க ..... அவரது பிள்ளைகளோ ‘"சார்... சார் எப்படியாவது எங்க அம்மாவைக் கண்டு பிடிச்சிக் கொடுத்துடுங்க. அம்மா இல்லாம எங்களால இருக்கமுடியாது'’என்று காக்கிகளிடம் கெஞ்சினர்.

அப்போது ஸ்டேஷன் வாசலுக்கு வந்து நின்றது அந்தக் கார். அதிலிருந்து கலைச்செல்வியும்... அரசு சித்த மருத்துவர் பாஸ்கரனும் இறங்க.... தேவராஜ் குடும்பத்தினரின் முகத்தில் குபீரென நிம்மதி வெளிச்சம். காரணம்... பாஸ்கரன் தேவராஜ் வீட்டின் மாடிப் போர்ஷனில்தான் குடியிருக்கிறார். அவரைப் பார்த்ததும்.. தேவராஜ்...

""வாங்க டாக்டர். என் மனைவியைக் கண்டு பிடிச்சிக் கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி''’ என்று நெகிழ்ந்தார். பாஸ்கரோ பதில் ஏதும் சொல்லாமல் இறுக்கமான முகத்தோடு இருக்க....



கலைச்செல்வியோ ""என்னை நீங்க தேடிக்கிட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டுதான் வந்தேன். இனி தேடாதீங்க. நானும் பாஸ்கரும் சேர்ந்து வாழப் போறோம். எங்க வாழ்க்கைல குறுக்கிடாதீங்க'' என்றாள் தெனாவெட்டாக.

இதைக்கேட்டு தேவராஜ் தலையில் இடிவிழுந்த மாதிரி நிற்க... அவரது மகள் கோபமாகி ""அம்மா உன் வயசென்ன? கல்யாண வயசில் உன் மகள் நான் இருக்கேன். அப்படியிருக்க... எங்களையெல்லாம் விட்டுட்டு... உன்னைவிட சின்ன வயசுக்காரனோட போறேன்னு சொல்றியே உனக்கு வெட்கமா இல்லையா''’என்றாள் காட்டமாக. 

பள்ளியில் படிக்கும் மகனோ, ""அம்மா தயவுசெஞ்சு நீ வீட்டுக்கு வந்துடும்மா. இல்லைன்னா எல்லாரும் கேள்வி கேட்பாங்க. அவமானமா ஆய்டும்மா. நான் ஸ்கூலுக்குக் கூடப் போகமுடியாதும்மா. ப்ளீஸ் வந்துடும்மா''’என்று கண்ணீருடன் கெஞ்ச ஆரம்பித்தான்.


கலைச்செல்வியோ, போலீஸார் பக்கம் திரும்பி ""என்னை யாரும் கடத்தலை, என் விருப்பப்படிதான் போறேன். வழக்கெல்லாம் பதிவு பண்ணாதீங்க''’என்றபடி.. பாஸ்கரின் கையைப்பிடித்துக் கொண்டு, .பிள்ளைகளைக்கூட திரும்பிப் பார்க்காமல்... காரில் போய் ஏறி னாள். தேவராஜ் குடும் பம் தலைகவிழ்ந்து கண்ணீர் வடிக்க... காக்கிகள் அவர்களை ஆறுதல் படுத்த படாதபாடு பட்டனர்.

சம்பவம்-2 :
பெரம்பலூர் ஆயுதப்படையில் போ லீஸாக இருக்கிறார் கல்பனா. அவருக்கும் அவரது அத்தை மகன் சங்கருக்கும் திருமணம் ஆனது. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் கல்பனா கர்ப்பமானார். இதைக்கண்டு மகிழ்ச்சியான கணவர் சங்கர்... ""இந்தத் தடவை நமக்கு ஆம்ப ளைப் பிள்ளைதான் பிறக்கப்போவுது.. வாயும் வயிறுமா இருக்கும் உன்னை கொஞ்சநாள் எங்க அம்மா வீட்டில் விடுறேன்'' என்று அழைக்க... ""நான் எங்கும் வரமுடியாது '' என்று அடம் பிடித்தார் கல்பனா. ஏன் என்று சங்கர் கேட்க... கல்பனாவோ... ""என் வயித்தில் வளரும் குழந்தைக்கு நீ அப்பா இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் டிராஃபிக் போலீஸ்காரர் காளிதாஸ் தான் அப்பா. அவரை விட்டுட்டு நான் எங்கும் வரமாட்டேன்''’ என்று கணவர் சங்கரின் தலையில் குண்டைப்போட்டார்.




இதைக்கண்டு கொதித்துபோன சங்கர்... என் மனைவியின் மனதைக் கெடுத்துவிட்டார் என டிராஃபிக் காளிதாஸ் மீது புகார் கொடுக்க... காக்கிகள் கண்டித்தனர். கல்பனா தன் முடிவில் உறுதியாக இருக்க.. காளிதாஸின் மனைவியையும் கூப்பிட்டு விசயத்தைச் சொன் னார்கள்.



காளிதாஸின் மனைவி யோ... ""எனக்கும் என் வீட்டுக் காரருக்கும் இத்தனை வருசம் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் கல்பனாவை அவ ருக்கு நானே ரெண்டாம் தாரமா கட்டிவச்சிடுறேன். கல்பனாவும் எங்க வீட்டிலேயே இருக்கட் டும்''’என்று வீடு ’டிராபிக்’ ஆவதைப்பற்றிக் கவலைப்படாமல் சொன்னார். இதைக்கேட்டு காக்கிகள் திகைத்துப்போக... கல்பனாவின் உறவினர்களும் சங்கரின் உறவினர்களும் "குடும்ப கௌரவத்தைக் கெடுக்காதே. உன் கணவரோடு வாழு'’என கல்பனாவை சமாதானப்படுத்த முயன்றனர். 

இந்தக் களேபரங்களைக் கண்டு கல்பனாவின் பெண்குழந்தை அழுதது. கல்பனாவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காளிதாஸுடன் புறப்பட... போலீ ஸோ, கணவர் சங்கர் கொடுத்த புகாரைப் பதிவு செய்துவிட்டு... "அடச்சே'’என்று தலையில் அடித்துக்கொண்டது.  

எங்கே போகிறது இந்து மதம்

Tuesday, April 23, 2013

குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கு 'லிப் டூ லிப்' தரும் சாமியார்...!!

கோவை: 

குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களிடம் சென்றால் அவர்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சியளிக்கிறார் கோவை அருகே உள்ள சாமியார். திருமணமான தம்பதியர்களுக்கு ஒரு வருடத்திற்கு குழந்தை பிறந்து விட்டால்தான் போச்சு. இல்லை என்றார் உறவினர்கள், நண்பர்களின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக பலவித சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள் இருக்கின்றனர். ஒரு சிலர் கோவில் குளம் என்று சுற்றுவார்கள். இன்னும் சிலர் சாமியாரை நாடிச் செல்வார்கள். முதல் இரண்டு ரகத்தினரையாவது ஒரு வழியில் சேர்க்கலாம். ஆனால் பிள்ளை வரத்திற்காக சாமியாரிடம் செல்பவர்களை என்னவென்று சொல்வது.. 



லிப் டூ லிப் டிரான்ஸ்பர் கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியாரோ பிள்ளை வரம் தரும் சாமியாராக இருக்கிறாராம். இதற்காக அவரை நாடிச்செல்லும் பக்தர்களுக்கு வித்தியாசமான முறையில் வரம் தருகிறார். எப்படி என்று கேட்கிறீர்களா? வாழைப்பழத்தை சாமிக்கு காணிக்கையாக படைப்பார்கள். அப்போது அதை எடுத்து சாப்பிடும் சாமியார் நன்றாக மென்று அதை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார். இந்த சேவைக்கு! பெயர் கவாள சேவையாம்.



அர்ஜூன் மனிஷா கொய்ராலா முதல்வன் படத்தில் உப்புக்கருவாடு பாட்டில் ஒரு சீன் வரும்... வெத்தலையை நன்றாக மென்று தின்னும் மனீஷா கொய்ராலா அதை அர்ஜூன் வாயில் டிரான்ஸ்பர் செய்வார். அப்படித்தான் வாழைப்பழத்தை ஊட்டுகிறார் சாமியார்.



ஆண்களுக்கு எலுமிச்சை இந்த லிப் டூ லிப் வரம் எல்லாம் பெண்களுக்கு மட்டும்தானாம். அப்போ ஆண்களுக்கு என்ன என்று கேட்கிறீர்களா? எலுமிச்சை கனியை வாயில் வைத்து துப்புவார் சாமி. அதை பிள்ளை இல்லாத ஆண்கள் துண்டை வைத்து கேட்ச் பிடிக்க வேண்டும். (இது எப்டி!)

Sunday, April 21, 2013

சிறுமியை 2 பேர் 2 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர்

டெல்லி: 

டெல்லியில் 5 வயது சிறுமியை ஒருவர் அல்ல இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அவர் குடியிருக்கும் வீட்டின் தரைதளத்தில் குடியிருக்கும் மனோஜ் குமார்(22) என்ற வாலிபர் கடத்தி தனது வீட்டில் அடைத்து வைத்து 2 நாட்களாக உணவு, தண்ணீர் கொடுக்காமல் சிறுமியை கற்பழித்தார். 



இதையடுத்து சிறுமியின் உடலுக்குள் பாட்டில், மெழுகுவர்த்தி ஆகியவற்றை திணித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இதற்கிடையே போலீசார் மனோஜ் குமாரை பீகாரில் வைத்து நேற்று கைது செய்தனர். விசாரணையில் மனோஜ் குமாருடன் சேர்ந்து பிரதீப் குமார் என்பவரும் சேர்ந்து சிறுமியை சீரழித்தது தெரிய வந்துள்ளது.




இதையடுத்து பிரதீப்பை கைது செய்ய தனிப்படை பீகார் விரைந்துள்ளது. சிறுமி கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்து நேற்று டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.

நமது ஹிந்து சிறுமிகளை நாமே இப்படி கற்பழித்து கொடூரமாக சாகடித்தால், நாம் சமுதாய ஒற்றுமையை எப்படி ஏற்படுத்த முடியும். நமது மதச் சட்டங்களும் இஸ்லாமியர்களைப் போல் கடுமையானால்தான், தண்டனைகளை குறைக்க முடியும்.

Wednesday, March 20, 2013

குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்!



புதுடெல்லி:

நரேந்திர மோடியின் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன.

கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.


 

அன்ஹத்(ஆக்ட் நவ் ஃபார் ஹார்மனி அண்ட் டெமோக்ரஸி) என்ற அமைப்பு சம்பவம் நடந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

சோட்டா உதய்பூரில் அகாபாரா, வஸேலி, வானார் காம், தேடர் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் நடத்தி வரும் நான்கிற்கும் மேற்பட்ட மினரல் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், பண்ணைகள், ப்ளாஸ்டிக் குடோன்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காட்சி ஊடகங்கள் இங்குள்ள காட்சிகளை படம் பிடித்தபோதும் தொலைக்காட்சி சானல்கள் எதுவுமே இதுத்தொடர்பான செய்திகளையோ, காட்சிகளையோ ஒளிபரப்பவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறியதாக அன்ஹதின் ஸ்தாபக உறுப்பினர் ஷப்னம் ஹாஷ்மி செய்தியாளர்கள் சந்திப்பில்தெரிவித்தார்.

கடந்த மாதம் பஸ் ரூட் தொடர்பாக உருவான சிறியச் சண்டை முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு ரீதியான தாக்குதலுக்கு காரணமானது. பரோஜ் கிராமத்தைச் சார்ந்த சர்பஞ்சும், பஸ் உரிமையாளருமான ஜயந்தி ரத்வா, அலிராஜ்பூர்-சோட்டா உதய்பூர் ரூட்டில் உள்ள பஸ் சர்வீஸ்கள் அனைத்தையும் சொந்தமாக்குவதற்கு உருவாக்கிய பிரச்சனைகள் தாம் கலவரத்திற்கு வழிவகுத்தது.


இர்ஃபான் அப்துல் கனி, மெஹ்பூப் அப்துல் கனி ஆகியோரின் பேருந்துகளும் இந்த ரூட்டில் சர்வீஸ் நடத்துகின்றன. ரத்வாவின் பேருந்து இவர்களின் பேருந்துடன் மோதி, தொடர்ந்து ஏற்பட்ட வாக்கு தர்க்கம் முஸ்லிம்கள் மீது சிறிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட காரணமானது. ஆனால், முஸ்லிம்களின் குடோன்களை தீக்கிரையாக்கி விட்டு, பழங்குடியினர் மீது தாக்குதலும், அத்துமீறலும் நடப்பதாகவும் 13-ஆம் தேதி சோட்டா உதய்பூரில் முழு அடைப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நோட்டீஸில் அதனை வெளியிட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பழங்குடியின தலைவர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்பஞ்ச்(பஞ்சாயத்து தலைவர்) ஜயந்தி ரத்வா, ஈஸ்வர் டேத்க ரத்வா ஆகியோர் தாம் இந்த நோட்டீஸ்களை அச்சிட்டவர்கள் என்று அன்ஹத் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நோட்டீஸ் விநியோகிக்கப்பட்ட மறு நாள் சோட்டா உதய்பூரின் கனாவத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவரின் ட்ரக்கும் ஒரு முஸ்லிமின் ட்ரக்கும் மோதிக் கொண்டன. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் அளித்த போதும் பழங்குடியினர் போலீஸ் ஸ்டேசனை சுற்றி வளைத்து மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீஸ் வழக்குப் பதிவுச் செய்யவில்லை. பின்னர் மீண்டும் முஸ்லிம்கள் மீது பெரிய அளவில் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. முஸ்லிம்களும் திரண்டதைத் தொடர்ந்து போலீஸ் முஸ்லிம்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியது.


கலவரம் நடக்கும் பொழுது முஸ்லிம்களை வீடியோ எடுத்து போலீசுக்கு அளிக்கும் திவ்ய பாஸ்கர் என்ற பத்திரிகையாளரின் சில இளைஞர்கள் தடுத்து கேமராவை பறிக்க முயற்சித்தனர். இதற்கு எதிராக பாஸ்கர் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பல முஸ்லிம்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்தது. 24 முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவுச் செய்த போலீஸ் 8 பழங்குடியினர் மீது மட்டுமே வழக்குப் போட்டது. அடுத்த நாள் பல்வேறு சிறுபான்மை வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தன.


டி.ஐ.ஜி, எஸ்.பி.ராங்கில் உள்ள அதிகாரிகள் அங்கு வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு ப்ளாஸ்டிக் குடோனை தீக்கிரையாக்கிய சோட்டா உதய்பூரில் ரவுடிக் கும்பலின் பெயர் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவனோசுதந்திரமாக நடமாடுகிறான். 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்ய வி.ஹெச்.பி நேரடியாக களமிறங்கியது.


இம்மாதம் 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் மீண்டும் முஸ்லிம்களின் குடோன்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வழக்கில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சில உயர் மட்டத் தலைவர்களின் உத்தரவின் பேரிலேயே குடோன்களுக்கு தீவைத்ததாக இந்த நபர் முதலில் வாக்குமூலம் அளித்தான். ஆனால், பின்னர் பீடித்துண்டு கீழே விழுந்து அதில் இருந்து உருவான நெருப்பு மூலம் குடோன்களுக்கு தீப்பிடித்ததாக போலீஸ் வாக்குமூலத்தை மாற்றியது. ஆனால், இவையெல்லாம் மோடியின் போலீசுக்கோ, மோடியிடம் ஆதாயம் பெறும் ஊடகங்களுக்கோ ஒரு செய்தியே அல்ல.

நரேந்திர மோடியின் உத்தரவுக்கு கீழ்படியும் அடிமை சேவகம் புரிவதாக குஜராத் ஊடகங்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட அமைப்பு ரீதியான தாக்குதல்களும், கொள்ளையும், தீவைப்புச் சம்பவங்களும் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்படுவதன் மூலம் இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகிறது.


தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnline



Tuesday, March 19, 2013

ஆர்.எஸ்.எஸ். கோழைகளும்! வீரத்துறவியின் மரணமும்! ஆய்வு!

 

கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுவாமி நிகமானந்தா வீர மரணமடைந்தார்.


உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா வயது 36, கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகமானந்தாவின் உயிர் பிரிந்தது.

 

இதற்கிடையே, சுவாமி நிகமானந்தாவின் மரணம் குறித்து, பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவருக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும், மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார்.

சிந்திக்கவும்: ஆளும் பி ஜேபி அரசு இவரது உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளாமல், கல்குவாரி முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு இவரை கொன்று விட்டது என்றே சொல்லலாம். ஹிந்து மதத்தினர் புனிதமாக கருதும் கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த ஒரு சாமியார் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணமும் அடைந்துள்ளார்.


இவர் உண்ணவிரதம் இருந்ததை எந்த பத்திரிக்கையும் தலைப்பு செய்தியாக போடவில்லை. இப்படியாக கங்கை நதியை பாதுக்காக்க சாமியார் நிகமானந்தா உயிர் தியாகம் செய்து வீரத்துறவியானார். இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களும், அதன் ஊதுகுழலான பார்பன பத்திரிக்கைகளும் “இவரை பற்றி செய்திகளை போட்டு மக்கள் ஆதரவை” இவருக்கு தேடிக்கொடுக்கவில்லை. இப்படி, ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார் என்பது எத்தனை மக்களுக்குதான் தெரியும்?

ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் அனுதாபிகளும் யோகா சாமியார் ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவரது உண்ணாவிரதத்திற்கு கொடுக்கவில்லையே அது ஏன்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் முகமூடி பி.ஜே.பி ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் இப்படி நடந்திருப்பது இவர்களுக்கு ஹிந்து மக்களின் நலனில் ஒன்றும் சிறப்பான அக்கறை கிடையாது என்பதையே காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களின் நோக்கம் ஹிந்து மக்களுக்கு நன்மை செய்வது என்பதில் இல்லை. பாபா ராம்தேவ் என்கிற மோசடி சாமியாரின் உண்ணாவிரதத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி, மத்திய அரசை கொடுத்த நெருக்கடி இருகிறதே அது சொல்லி மாளாது. பாபா ராம்தேவ்வின் உயிருக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று கூவினார்கள் இந்த பி.ஜே.பி. காரர்கள் அப்படி பட்டவர்கள் தங்கள் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஒரு ஹிந்து சாமியார் இறந்துவிட்டார், அதுவும் மர்மமான முறையில் இதற்க்கு இவர்கள் பொறுப்பேற்று ஆட்சி துறப்பார்களா?.




ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை கட்டி அமைத்தவர்கள் பிராமணர்களே. ஹிந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இதுவே இவர்களது முக்கிய நோக்கம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அதன் உயர் உயர்பதவிகளில் இருப்பது அனைவரும் பிராமணர்களே என்பது! மிகச்சிறுபான்மையினரான யூதர்கள் சூழ்ச்சியின் மூலம் எப்படி உலகத்தை ஆளுகின்றனரோ?, அதுபோல் இந்தியாவில் மதமாச்சாரியாங்களை உண்டாக்கி அதன்மூலம் ‘இந்த பார்பனர்கள்’ ஆட்சி மற்றும் அதிகார பீடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

அத்வானி, ராம கோபாலன் வகைறாக்கள் “ஹிந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்ப்படுத்த” ரதயாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, காசி, மதுரா இப்படி புதுபுது பிரச்சனைகளாக உண்டாக்குகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. ஏன் இவர்கள் பாபா ராம்தேவையும், அன்னா ஹசாரவையும் மட்டும் தூக்கிப்பிடித்தார்கள் என்றால்? ஒன்று இந்தியாவின் ஆட்சியை பிடிக்க, மற்றொன்று இவர்கள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளை மறைக்க. தொடர் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பங்கு வெட்டவெளிச்சமாகி உள்ள இந்நிலையில் இதில் இருந்து தப்பிக்க ஆட்சியை பிடித்தால் மட்டுமே முடியும், என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள்.

இதன் ஒரு பகுதிதான் ஊழல் ஒழிப்பு, அந்நிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்ட கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருகிறோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் பாபா ராம்தேவ் போன்றவர்களை வைத்து நடத்திய நாடகம். இவர்கள் இந்தியாவை ஆளும் பொழுது இதையெல்லாம் செய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. இந்த வக்கற்றவர்கள் செய்த ஊழலை சொன்னால் இந்தியாவே நாறும். கார்க்கில் யுத்தத்தில் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வாங்கிய சவபெட்டியில் ஊழல் செய்தவர்கள்தான் இந்த தேசபக்த வேடதாரிகள்.

கங்கை நதியை சுற்றி கல்குவாரி வைத்திருந்தவர்களில் பெரும்பகுதியினர், பி.ஜே.பி, மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே என்பதும், அதானால்தான் இவர்கள் சுவாமி நிகமானந்தா நடத்திய உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு முறையான சிகிச்சை அழைக்கப்படவில்லை, இவரது உண்ணாவிரதத்தை யாரும் முடித்து வைக்க முயற்ச்சிக்கவில்லை இவரை பரிதாபமாக சாகவிட்டுவிட்டார்கள் என்று கடும் குற்றச்சாட்டு இவர்கள் மேல் எழுந்துள்ளது.

மேலும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சொல்லி வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதல் பல ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடிகள் வேண்டுகோள்விடுத்தனர். ஆனால் சுவாமி நிகமானந்தாவை யாரும் கண்டு கொள்ளவில்லை அவரது உண்ணா விரதத்தை முடித்துவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை. மேலும், இவருக்கு அளிக்கப்பட சிகிச்சையின் பொழுது இவரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளதாக மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாநில ஆளும்கட்சியான பாரதிய ஜனதா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது, ஆனால் காங்கிரஸ் இவர் மரணமடைய காரணமே பி.ஜே.பி ஆட்சியின் மெத்தன போக்கே என்று குற்றம் சாட்டியது. எனவே சி.பி.ஐ. விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறது. கல் குவாரிகாரர்களோடு அரசுக்கு இருந்த நெருங்கிய தொடர்பு, இவரது தொடர் உண்ணாவிரதத்தை அனுமத்தித்தது, முறையான சிகிச்சை கொடுக்காதது ஆகியவையே இவரது மரணத்திற்கு காரணம் என்று காங்கிரஸ் கடும் குற்றம் சாடியுள்ளது. 


கோயிலில் மாட்டுக்கறி வீசிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கைது

 

நாட்டில் நடைபெறும் அனைத்து கலவரங்களுக்கும் பின்னணியில் காவி பயங்கரவாத இயக்கங்கள் இருப்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது. நாட்டில், ஹிந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களுடைய ஃபாசிச அஜண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காக, நல்லிணக்கத் தோடு வாழும் மக்களிடம் பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

 

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி ஒருவன், ஹைதராபாத் “பகதூர்புரா” கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், ‘‘இந்து கோவிலில் முஸ்லிம்கள் மாட்டுக்கறியைப் போட்டுள்ளனர்’’ என மக்களிடம் விஷமப் பிரச்சாரம் செய்து, பெரும் வன்முறைக் கலவரத்தை ஏற்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது. அந்த தேசத்துரோக பயங்கரவாதியின் பெயர் சிவகுமார் (எ) ராகேஷ். 19 வயதான இவன், 7ம் வகுப்பு வரை படித்துள்ளான். (அவனுக்கு 18 வயதுதான் ஆகிறது என்றும், அவன் மீதுகடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கூறி அவனைக் காப்பாற்றும் முயற்சியில் காவி தீவிரவாதிகள் இறங்கியுள்ளனர்.) தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட அவனை செய்தியாளர்கள் முன்பு, காவல்துறையினர் நேர் நிற்கச் செய்தனர்.

 
மேலும், தேசத்துரோக பயங்க ரவாதி சிவகுமார் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 153ஏ மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No. 83/2012). வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நாண்டேட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது, குண்டு வெடிப்பு பகுதியில் காவி தீவிரவாதிகளின் வீட்டில் தொப்பிகள் மற்றும் ஒட்டுத்தாடிகள் கண்டெடுக்கப்பட்டன. சமீபத்தில் கர்நாடகாவில், தாலுகா அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய விஷமச் செயலில் காவி பயங்கரவாத ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர். தாங்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றவில்லை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்தான் இந்தக் கொடியினை ஏற்றினர்; ஆனால் பாஜக அரசு அவர்களைத் தப்பவிட்டு தங்கள் அமைப்பினரை பிடித்து விட்டதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமோத் முத்தலிக் போட்டுக் கொடுத்தார். எது எப்படியோ, பாகிஸ்தான் கொடி என்றாலும் சரி, குண்டு வெடிப்புகள் என்றாலும் சரி, காவிகள் கையும் களவுமாகப் பிடிபடுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில் புலனாய்வு அமைப்புகளும் நீதி பரிபாலன அமைப்புகளும் இனியாவது தங்களது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுமா? 
- TMMK