Tuesday, March 19, 2013

கோயிலில் மாட்டுக்கறி வீசிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கைது

 

நாட்டில் நடைபெறும் அனைத்து கலவரங்களுக்கும் பின்னணியில் காவி பயங்கரவாத இயக்கங்கள் இருப்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது. நாட்டில், ஹிந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களுடைய ஃபாசிச அஜண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காக, நல்லிணக்கத் தோடு வாழும் மக்களிடம் பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

 

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி ஒருவன், ஹைதராபாத் “பகதூர்புரா” கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், ‘‘இந்து கோவிலில் முஸ்லிம்கள் மாட்டுக்கறியைப் போட்டுள்ளனர்’’ என மக்களிடம் விஷமப் பிரச்சாரம் செய்து, பெரும் வன்முறைக் கலவரத்தை ஏற்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது. அந்த தேசத்துரோக பயங்கரவாதியின் பெயர் சிவகுமார் (எ) ராகேஷ். 19 வயதான இவன், 7ம் வகுப்பு வரை படித்துள்ளான். (அவனுக்கு 18 வயதுதான் ஆகிறது என்றும், அவன் மீதுகடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கூறி அவனைக் காப்பாற்றும் முயற்சியில் காவி தீவிரவாதிகள் இறங்கியுள்ளனர்.) தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட அவனை செய்தியாளர்கள் முன்பு, காவல்துறையினர் நேர் நிற்கச் செய்தனர்.

 
மேலும், தேசத்துரோக பயங்க ரவாதி சிவகுமார் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 153ஏ மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No. 83/2012). வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நாண்டேட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது, குண்டு வெடிப்பு பகுதியில் காவி தீவிரவாதிகளின் வீட்டில் தொப்பிகள் மற்றும் ஒட்டுத்தாடிகள் கண்டெடுக்கப்பட்டன. சமீபத்தில் கர்நாடகாவில், தாலுகா அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய விஷமச் செயலில் காவி பயங்கரவாத ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர். தாங்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றவில்லை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்தான் இந்தக் கொடியினை ஏற்றினர்; ஆனால் பாஜக அரசு அவர்களைத் தப்பவிட்டு தங்கள் அமைப்பினரை பிடித்து விட்டதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமோத் முத்தலிக் போட்டுக் கொடுத்தார். எது எப்படியோ, பாகிஸ்தான் கொடி என்றாலும் சரி, குண்டு வெடிப்புகள் என்றாலும் சரி, காவிகள் கையும் களவுமாகப் பிடிபடுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில் புலனாய்வு அமைப்புகளும் நீதி பரிபாலன அமைப்புகளும் இனியாவது தங்களது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுமா? 
- TMMK

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.