Saturday, March 9, 2013

சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது

திருச்சி : 

 


திருச்சியில் வறுமையைக் காரணம் காட்டி, இரண்டு ஏழை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த 14 வயது பள்ளி மாணவர் முதல் 42 வயது லோடுமேன் வரையிலான ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, அரியமங்கலம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராணி (35). இவருடைய கணவர் சுகுமார், ஏழாண்டுக்கு முன் இறந்துவிட்டார். ராணிக்கு கவிதா (12), கீதா (10) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

 

கணவர் இறந்தபின் வறுமை காரணமாக, ராணி கூலி வேலை செய்து, தன் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். படிக்க வசதியில்லாததால், இரண்டு சிறுமிகளும் பள்ளி செல்வதை நிறுத்தினர். இவர்கள் வீடருகே, கொத்தனார் வேலை பார்க்கும் காளிபப்பன் (18) என்ற வாலிபர் உள்ளார். அவர், சிறுமிகளுக்கு அவ்வப்போது சாக்லேட், இனிப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை தொடுவது, முத்தமிடுவது உள்ளிட்ட “செக்ஸ்’ விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.



தான் அனுபவித்ததை, நண்பர்கள் நடராஜன் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செல்வா (14) ஆகியோரிடம் கூறினார். அவர்கள், தங்களுக்கும் அந்த சிறுமிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். சம்மதம் தெரிவித்த காளியப்பன் இரு சிறுமிகளிடமும் நைசாக பேசி, நண்பர்களிடமும் இணக்கமாக இருக்க சம்மதம் வாங்கினார். இதையடுத்து அந்த மூவரும் சில நாட்களாக அவர்கள் வசித்த பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் கூடி, சிறுமிகளிடம் சிற்றின்பம் அனுபவித்து வந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன், காய்கறி கடை வைத்திருக்கும் குமார் (34) என்பவரும், காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக பணியாற்றும் ராதா பீட்டர் (42) என்பவரும் அதை பார்த்து விட்டனர். அவர்கள் அந்த மூன்று பேரையும் மிரட்டினர். அதற்கு அவர்கள், “வேண்டும் என்றால் நீங்களும் அனுபவித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினர்.

இதையடுத்து, அந்த சிறுமிகள் இருவரையும் மூன்று நாட்களாக தினமும் மாலைநேரத்தில் புதிய கட்டடத்திற்கு வரச் சொல்லி, ஐந்து பேரும் ஒன்றாக செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். மூன்று நாட்களாக நடந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி மக்களுக்கு அரசல்புரசலாக தெரிந்தது. அவர்கள் சிறுமிகளின் தாயிடம் தெரிவித்தனர். ராணி இதுகுறித்து, அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், நேற்று முன்தினம் இரவு, ராதா பீட்டர், குமார், பள்ளி மாணவன் செல்வா, கொத்தனார்கள் காளியப்பன், நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் 1 நீதிபதி நாகவள்ளி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். m

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.