Tuesday, March 5, 2013

கற்பழிப்பு வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது

அம்பத்தூர், ஏப்.18- கற்பழிப்பு வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அம்பத்தூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சுதாராணி. இவர் அரசு பொதுத்துறை நிறுவனமான தொலை பேசித் துறையில் வேலை செய்றீது வருகிறார். இவர்களுடைய மகள் கீதா (வயது 17-பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற கீதா இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாராணி அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகிலா வழக்குப்பதிவு செய்து மாயமான கீதாவை வலை வீசி தேடினார்.
இந்த நிலையில் மாயமான கீதா அம்பத்தூர் பஸ் நிலையத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது காணாமல் போன கீதா என்பது தெரிய வந்தது. அவரிடம் மாயமான சம்பவம் குறித்து போலீசார் துருவித் துருவி கேட்டனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள மதனபள்ளி எங்களது சொந்த ஊர். அங்கிருந்தபோது எனது தந்தை ரவி இறந்து விட்டார். அவரது வேலை வாரிசு அடிப்படையில் எனது தாய்க்கு கிடைத்தது. அவர் அம்பத்தூரில் வீடெடுத்து தங்கி இருந்தார். நான் மதனபள்ளியில் எனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தேன்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அசோக்குமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலிக்க தொடங்கினேன். இருவரும் உயிருக்கு உயிராக நேசித்தோம். இதற்கு எங்கள் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

உல்லாசம்

இதையடுத்து என்னை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் நானும் அசோக்குமாரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். இதற்கிடையே கடந்த 13-ந் தேதி சென்னை வந்த அசோக்குமார், உடனடியாக என்னை கோயம்பேடு வரச் சொன்னார். அதன்படி நானும் கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து இருவரும் மதனபள்ளிக்கு சென்றோம். அங்கு எனது சக மாணவி அனிதா வீட்டிற்கு சென்று தங்கினேன். 
அங்கு வைத்து என்னை கட்டாயப்படுத்தி அசோக்க்குமார் உல்லாசமாக இருந்தார். இப்படி 4 நாள்கள் உல்லாசமாக இருந்தார். இதற்கிடையே என்னைக் காணவில்லை என்று எனது தாயார் அம்பத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் என்னை தேட தொடங்கினார்கள்.

இதனால் பயந்து போன அசோக்குமார் என்னை சென்னை அழைத்து வந்து அம்பத்தூர் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இவ்வாறு கீதா கூறினார். கைது இதை தொடர்ந்து உஷாரான போலீசார் விரைந்து செயல்பட்டு அம்பத்தூர் கனரா வங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அசோக்குமாரை மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் ஜமால், கற்பழிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை (19) கைது செய்தார். 24 வயது பூர்த்தி ஆனவுடன் தான் புழல் மத்திய சிறையில் அடைக்கமுடியும். கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அசோக்குமாருக்கு 19 வயது ஆவதால் சைதாப்பேட்டை கிளை சிறையில் (சப்-ஜெயில்) அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.