தாயாக நினைக்க வேண்டிய மாமியாரை மருமகள் கொல்வதும், மகளாக நினைக்க வேண்டிய மருமகளை கொடுமைப் படுத்துவதும் ஹிந்து மதத்தில் சர்வசாதாரணமாக போனதை எண்ணி வருத்தமாகத்தான் உள்ளது.
எந்த மதத்திலும் இல்லாத அளவிற்கு வரதட்சினை கொடும் நமது ஹிந்து மதத்தில்தான் வழிந்தோடுகிறது, அதை ஒடுக்க நமது இயக்கங்கள் தயாராக இல்லை. அதேபோல் தன்மகள் மருனகனோடு சந்தோசமாக பார்க்கும் தார்மார்கள், மருமகளை சந்தோஷமாக பார்க்க விரும்புவதில்லை.
இப்படித்தான் சமீபத்தில் சென்னையில் பிராமண பெண் ஒருவர் தனது மாமியார் தனக்கு இடையூறு செய்ததால் அவரை தீர்த்து கட்டிய அவலம் நடந்தேறியுள்ளது. தான் தனது கணவருடன் உறவு வைத்துக் கொள்ளா தடையாக இருந்தார், ஆகவே பணமிருந்தும் சந்தோஷம் இல்லையே என்ற விரக்தியில் கொலை செய்ததாக கைதாகியுள்ளார்.
வேதங்களை போதிக்கும் பிராமண சமுதாயத்திலேயே இப்படி பிரச்சினைகள் மழிந்து கிடப்பது மிகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. வேதங்களை படித்த இவர்கள் இப்படி செய்தால், நமது வேதத்தில் குறை இருப்பதாக அல்லவா மக்களுக்கு எண்ணங்கள் தோணும்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.