Wednesday, March 20, 2013

குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்!



புதுடெல்லி:

நரேந்திர மோடியின் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன.

கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.


 

அன்ஹத்(ஆக்ட் நவ் ஃபார் ஹார்மனி அண்ட் டெமோக்ரஸி) என்ற அமைப்பு சம்பவம் நடந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

சோட்டா உதய்பூரில் அகாபாரா, வஸேலி, வானார் காம், தேடர் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் நடத்தி வரும் நான்கிற்கும் மேற்பட்ட மினரல் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், பண்ணைகள், ப்ளாஸ்டிக் குடோன்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காட்சி ஊடகங்கள் இங்குள்ள காட்சிகளை படம் பிடித்தபோதும் தொலைக்காட்சி சானல்கள் எதுவுமே இதுத்தொடர்பான செய்திகளையோ, காட்சிகளையோ ஒளிபரப்பவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறியதாக அன்ஹதின் ஸ்தாபக உறுப்பினர் ஷப்னம் ஹாஷ்மி செய்தியாளர்கள் சந்திப்பில்தெரிவித்தார்.

கடந்த மாதம் பஸ் ரூட் தொடர்பாக உருவான சிறியச் சண்டை முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு ரீதியான தாக்குதலுக்கு காரணமானது. பரோஜ் கிராமத்தைச் சார்ந்த சர்பஞ்சும், பஸ் உரிமையாளருமான ஜயந்தி ரத்வா, அலிராஜ்பூர்-சோட்டா உதய்பூர் ரூட்டில் உள்ள பஸ் சர்வீஸ்கள் அனைத்தையும் சொந்தமாக்குவதற்கு உருவாக்கிய பிரச்சனைகள் தாம் கலவரத்திற்கு வழிவகுத்தது.


இர்ஃபான் அப்துல் கனி, மெஹ்பூப் அப்துல் கனி ஆகியோரின் பேருந்துகளும் இந்த ரூட்டில் சர்வீஸ் நடத்துகின்றன. ரத்வாவின் பேருந்து இவர்களின் பேருந்துடன் மோதி, தொடர்ந்து ஏற்பட்ட வாக்கு தர்க்கம் முஸ்லிம்கள் மீது சிறிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட காரணமானது. ஆனால், முஸ்லிம்களின் குடோன்களை தீக்கிரையாக்கி விட்டு, பழங்குடியினர் மீது தாக்குதலும், அத்துமீறலும் நடப்பதாகவும் 13-ஆம் தேதி சோட்டா உதய்பூரில் முழு அடைப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நோட்டீஸில் அதனை வெளியிட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பழங்குடியின தலைவர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்பஞ்ச்(பஞ்சாயத்து தலைவர்) ஜயந்தி ரத்வா, ஈஸ்வர் டேத்க ரத்வா ஆகியோர் தாம் இந்த நோட்டீஸ்களை அச்சிட்டவர்கள் என்று அன்ஹத் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நோட்டீஸ் விநியோகிக்கப்பட்ட மறு நாள் சோட்டா உதய்பூரின் கனாவத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவரின் ட்ரக்கும் ஒரு முஸ்லிமின் ட்ரக்கும் மோதிக் கொண்டன. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் அளித்த போதும் பழங்குடியினர் போலீஸ் ஸ்டேசனை சுற்றி வளைத்து மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீஸ் வழக்குப் பதிவுச் செய்யவில்லை. பின்னர் மீண்டும் முஸ்லிம்கள் மீது பெரிய அளவில் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. முஸ்லிம்களும் திரண்டதைத் தொடர்ந்து போலீஸ் முஸ்லிம்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியது.


கலவரம் நடக்கும் பொழுது முஸ்லிம்களை வீடியோ எடுத்து போலீசுக்கு அளிக்கும் திவ்ய பாஸ்கர் என்ற பத்திரிகையாளரின் சில இளைஞர்கள் தடுத்து கேமராவை பறிக்க முயற்சித்தனர். இதற்கு எதிராக பாஸ்கர் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பல முஸ்லிம்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்தது. 24 முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவுச் செய்த போலீஸ் 8 பழங்குடியினர் மீது மட்டுமே வழக்குப் போட்டது. அடுத்த நாள் பல்வேறு சிறுபான்மை வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தன.


டி.ஐ.ஜி, எஸ்.பி.ராங்கில் உள்ள அதிகாரிகள் அங்கு வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு ப்ளாஸ்டிக் குடோனை தீக்கிரையாக்கிய சோட்டா உதய்பூரில் ரவுடிக் கும்பலின் பெயர் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவனோசுதந்திரமாக நடமாடுகிறான். 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்ய வி.ஹெச்.பி நேரடியாக களமிறங்கியது.


இம்மாதம் 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் மீண்டும் முஸ்லிம்களின் குடோன்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வழக்கில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சில உயர் மட்டத் தலைவர்களின் உத்தரவின் பேரிலேயே குடோன்களுக்கு தீவைத்ததாக இந்த நபர் முதலில் வாக்குமூலம் அளித்தான். ஆனால், பின்னர் பீடித்துண்டு கீழே விழுந்து அதில் இருந்து உருவான நெருப்பு மூலம் குடோன்களுக்கு தீப்பிடித்ததாக போலீஸ் வாக்குமூலத்தை மாற்றியது. ஆனால், இவையெல்லாம் மோடியின் போலீசுக்கோ, மோடியிடம் ஆதாயம் பெறும் ஊடகங்களுக்கோ ஒரு செய்தியே அல்ல.

நரேந்திர மோடியின் உத்தரவுக்கு கீழ்படியும் அடிமை சேவகம் புரிவதாக குஜராத் ஊடகங்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட அமைப்பு ரீதியான தாக்குதல்களும், கொள்ளையும், தீவைப்புச் சம்பவங்களும் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்படுவதன் மூலம் இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகிறது.


தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnline



Tuesday, March 19, 2013

ஆர்.எஸ்.எஸ். கோழைகளும்! வீரத்துறவியின் மரணமும்! ஆய்வு!

 

கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுவாமி நிகமானந்தா வீர மரணமடைந்தார்.


உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா வயது 36, கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகமானந்தாவின் உயிர் பிரிந்தது.

 

இதற்கிடையே, சுவாமி நிகமானந்தாவின் மரணம் குறித்து, பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவருக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும், மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார்.

சிந்திக்கவும்: ஆளும் பி ஜேபி அரசு இவரது உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளாமல், கல்குவாரி முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு இவரை கொன்று விட்டது என்றே சொல்லலாம். ஹிந்து மதத்தினர் புனிதமாக கருதும் கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த ஒரு சாமியார் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணமும் அடைந்துள்ளார்.


இவர் உண்ணவிரதம் இருந்ததை எந்த பத்திரிக்கையும் தலைப்பு செய்தியாக போடவில்லை. இப்படியாக கங்கை நதியை பாதுக்காக்க சாமியார் நிகமானந்தா உயிர் தியாகம் செய்து வீரத்துறவியானார். இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களும், அதன் ஊதுகுழலான பார்பன பத்திரிக்கைகளும் “இவரை பற்றி செய்திகளை போட்டு மக்கள் ஆதரவை” இவருக்கு தேடிக்கொடுக்கவில்லை. இப்படி, ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார் என்பது எத்தனை மக்களுக்குதான் தெரியும்?

ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் அனுதாபிகளும் யோகா சாமியார் ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவரது உண்ணாவிரதத்திற்கு கொடுக்கவில்லையே அது ஏன்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் முகமூடி பி.ஜே.பி ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் இப்படி நடந்திருப்பது இவர்களுக்கு ஹிந்து மக்களின் நலனில் ஒன்றும் சிறப்பான அக்கறை கிடையாது என்பதையே காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களின் நோக்கம் ஹிந்து மக்களுக்கு நன்மை செய்வது என்பதில் இல்லை. பாபா ராம்தேவ் என்கிற மோசடி சாமியாரின் உண்ணாவிரதத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி, மத்திய அரசை கொடுத்த நெருக்கடி இருகிறதே அது சொல்லி மாளாது. பாபா ராம்தேவ்வின் உயிருக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று கூவினார்கள் இந்த பி.ஜே.பி. காரர்கள் அப்படி பட்டவர்கள் தங்கள் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஒரு ஹிந்து சாமியார் இறந்துவிட்டார், அதுவும் மர்மமான முறையில் இதற்க்கு இவர்கள் பொறுப்பேற்று ஆட்சி துறப்பார்களா?.




ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை கட்டி அமைத்தவர்கள் பிராமணர்களே. ஹிந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இதுவே இவர்களது முக்கிய நோக்கம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அதன் உயர் உயர்பதவிகளில் இருப்பது அனைவரும் பிராமணர்களே என்பது! மிகச்சிறுபான்மையினரான யூதர்கள் சூழ்ச்சியின் மூலம் எப்படி உலகத்தை ஆளுகின்றனரோ?, அதுபோல் இந்தியாவில் மதமாச்சாரியாங்களை உண்டாக்கி அதன்மூலம் ‘இந்த பார்பனர்கள்’ ஆட்சி மற்றும் அதிகார பீடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

அத்வானி, ராம கோபாலன் வகைறாக்கள் “ஹிந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்ப்படுத்த” ரதயாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, காசி, மதுரா இப்படி புதுபுது பிரச்சனைகளாக உண்டாக்குகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. ஏன் இவர்கள் பாபா ராம்தேவையும், அன்னா ஹசாரவையும் மட்டும் தூக்கிப்பிடித்தார்கள் என்றால்? ஒன்று இந்தியாவின் ஆட்சியை பிடிக்க, மற்றொன்று இவர்கள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளை மறைக்க. தொடர் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பங்கு வெட்டவெளிச்சமாகி உள்ள இந்நிலையில் இதில் இருந்து தப்பிக்க ஆட்சியை பிடித்தால் மட்டுமே முடியும், என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள்.

இதன் ஒரு பகுதிதான் ஊழல் ஒழிப்பு, அந்நிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்ட கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருகிறோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் பாபா ராம்தேவ் போன்றவர்களை வைத்து நடத்திய நாடகம். இவர்கள் இந்தியாவை ஆளும் பொழுது இதையெல்லாம் செய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. இந்த வக்கற்றவர்கள் செய்த ஊழலை சொன்னால் இந்தியாவே நாறும். கார்க்கில் யுத்தத்தில் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வாங்கிய சவபெட்டியில் ஊழல் செய்தவர்கள்தான் இந்த தேசபக்த வேடதாரிகள்.

கங்கை நதியை சுற்றி கல்குவாரி வைத்திருந்தவர்களில் பெரும்பகுதியினர், பி.ஜே.பி, மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே என்பதும், அதானால்தான் இவர்கள் சுவாமி நிகமானந்தா நடத்திய உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு முறையான சிகிச்சை அழைக்கப்படவில்லை, இவரது உண்ணாவிரதத்தை யாரும் முடித்து வைக்க முயற்ச்சிக்கவில்லை இவரை பரிதாபமாக சாகவிட்டுவிட்டார்கள் என்று கடும் குற்றச்சாட்டு இவர்கள் மேல் எழுந்துள்ளது.

மேலும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சொல்லி வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதல் பல ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடிகள் வேண்டுகோள்விடுத்தனர். ஆனால் சுவாமி நிகமானந்தாவை யாரும் கண்டு கொள்ளவில்லை அவரது உண்ணா விரதத்தை முடித்துவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை. மேலும், இவருக்கு அளிக்கப்பட சிகிச்சையின் பொழுது இவரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளதாக மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாநில ஆளும்கட்சியான பாரதிய ஜனதா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது, ஆனால் காங்கிரஸ் இவர் மரணமடைய காரணமே பி.ஜே.பி ஆட்சியின் மெத்தன போக்கே என்று குற்றம் சாட்டியது. எனவே சி.பி.ஐ. விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறது. கல் குவாரிகாரர்களோடு அரசுக்கு இருந்த நெருங்கிய தொடர்பு, இவரது தொடர் உண்ணாவிரதத்தை அனுமத்தித்தது, முறையான சிகிச்சை கொடுக்காதது ஆகியவையே இவரது மரணத்திற்கு காரணம் என்று காங்கிரஸ் கடும் குற்றம் சாடியுள்ளது. 


கோயிலில் மாட்டுக்கறி வீசிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கைது

 

நாட்டில் நடைபெறும் அனைத்து கலவரங்களுக்கும் பின்னணியில் காவி பயங்கரவாத இயக்கங்கள் இருப்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது. நாட்டில், ஹிந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களுடைய ஃபாசிச அஜண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காக, நல்லிணக்கத் தோடு வாழும் மக்களிடம் பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

 

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி ஒருவன், ஹைதராபாத் “பகதூர்புரா” கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், ‘‘இந்து கோவிலில் முஸ்லிம்கள் மாட்டுக்கறியைப் போட்டுள்ளனர்’’ என மக்களிடம் விஷமப் பிரச்சாரம் செய்து, பெரும் வன்முறைக் கலவரத்தை ஏற்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது. அந்த தேசத்துரோக பயங்கரவாதியின் பெயர் சிவகுமார் (எ) ராகேஷ். 19 வயதான இவன், 7ம் வகுப்பு வரை படித்துள்ளான். (அவனுக்கு 18 வயதுதான் ஆகிறது என்றும், அவன் மீதுகடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கூறி அவனைக் காப்பாற்றும் முயற்சியில் காவி தீவிரவாதிகள் இறங்கியுள்ளனர்.) தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட அவனை செய்தியாளர்கள் முன்பு, காவல்துறையினர் நேர் நிற்கச் செய்தனர்.

 
மேலும், தேசத்துரோக பயங்க ரவாதி சிவகுமார் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 153ஏ மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No. 83/2012). வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நாண்டேட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது, குண்டு வெடிப்பு பகுதியில் காவி தீவிரவாதிகளின் வீட்டில் தொப்பிகள் மற்றும் ஒட்டுத்தாடிகள் கண்டெடுக்கப்பட்டன. சமீபத்தில் கர்நாடகாவில், தாலுகா அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய விஷமச் செயலில் காவி பயங்கரவாத ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர். தாங்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றவில்லை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்தான் இந்தக் கொடியினை ஏற்றினர்; ஆனால் பாஜக அரசு அவர்களைத் தப்பவிட்டு தங்கள் அமைப்பினரை பிடித்து விட்டதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமோத் முத்தலிக் போட்டுக் கொடுத்தார். எது எப்படியோ, பாகிஸ்தான் கொடி என்றாலும் சரி, குண்டு வெடிப்புகள் என்றாலும் சரி, காவிகள் கையும் களவுமாகப் பிடிபடுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில் புலனாய்வு அமைப்புகளும் நீதி பரிபாலன அமைப்புகளும் இனியாவது தங்களது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுமா? 
- TMMK

கம்யூனிஸ்ட்களை கட்டைகளால் தாக்கிய ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்!

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ளது பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி. இங்கு 3,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் தனி வகுப்பு நடந்தது. பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 2 நாள் கருத்தரங்கம் நடந்துள்ளது. இந்த கருத்தரங்குக்கு பல ஊர்களில் இருந்து ஏராளமான ஆர்எஸ்எஸ் உறுப்பனர்கள் வந்திருந்தனர். வாகனங்களில் தடி, உருட்டுக் கட்டைகளையும் அவர்கள் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கேள்விப்பட்ட கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமுமுக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் கொடிகளுடன் பலர் பள்ளி முன் திரண்டனர். மதவாதம், வன்முறையைத் தூண்டும் வகையில் ஆர்எஸ்எஸ் நடத்தும் கருத்தரங்குக்கு, பொது இடமான பள்ளியில் எப்படி இடம் தரவலாம் என்று என்று பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

rss21
rss3
உடனே பள்ளிக்குள் இருந்து தடிகள் மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் காக்கி அரைக்கால் சட்டையுடன் திமுதிமுவென ஓடிவந்தனர் ஆர்எஸ்எஸ்காரர்கள். வெளியில் நின்றிருந்த அனைத்துக் கட்சிகளின் இளைஞர்கள், முதியோர் என எல்லாரையும் வெறியோடு தாக்கினர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். டியவர்கள் மீது கற்களையும் வீசித் தாக்கினர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கமலநாதன், விடுதலைச் சிறுத்தைகள் டேவிட், நாராயணன், தமுமுக பாஷா, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜா, ராகவன் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தக் கலவரத்தைப் பார்த்து பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற்றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர்.
காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கள் சமுத்திரக்கனி, முனியப்பன், இன்ஸ்பெக்டர்கள் பாலு, சிவபாதசேகரன், பஞ்சாட்சரம் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிந்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி நிர்வாகி அருண்குமாரை அழைத்த போலீஸ் அதிகாரிகள், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை உடனே வெளியேற்றும்படி கூறினர். கோட்டாட்சியர் முருகையா (பொறுப்பு), தாசில்தார் நடராஜன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
 
இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி நாராயணசாமி கூறுகையில், ‘அமைதியான நகரம் காஞ்சிபுரம். இங்கு ஆர்எஸ்எஸ் காலூன்றி மதநல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கப்பார்க்கிறது. அதைத் தடுக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கட்சிக்காரர்களை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தாக்கினர். கமலநாதனை இழுத்து ரோட்டில் போட்டு தடியால் தாக்கினர். பாஷா தடுத்தார். அவர் முகத்தில் குத்தினர். அவருக்கு 4 பல் உடைந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தைக் கண்டித்தும், இந்த வன்முறைக் கும்பலை காஞ்சிபுரத்திலிருந்து வெளியேற்றக் கோரியும் 10-ம் தேதி காஞ்சிபுரத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என்றார்.
 
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் திட்டமிட்ட வன்முறைப் பயிற்சியை தடுத்து நிறுத்தக் கோரியும், நேற்றைய வன்முறையைக் கண்டித்தும் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் இதற்கு தலைமை வகித்தார். 

போதைப் பொருள் கடத்த முயன்ற இந்து பயங்கரவாதி கைது

  

மீனம்பாக்கம்: 

சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்த முயன்ற நைஜீரியா நாட்டு பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவங்களில் ரூ.5 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் இருந்து வெளிநாடுகள் சென்ற விமானத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு பாங்காக் புறப்பட இருந்த விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். சுற்றுலா பயணியாக பாங்காக்கில் இருந்து மலேசியா செல்ல வந்த சென்னை பாரிமுனையை சேர்ந்த அப்பு கலைவாணன் (34) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது கைப்பை மற்றும் அட்டைப் பெட்டியில் சோதனை போட்டனர். அதில், கேட்டமைன் வகை போதை பொருள் 21 கிலோ இருந்தது. இதன் மதிப்பு 2 கோடி 10 லட்சம். 

இதையடுத்து, அப்பு கலைவாணன் கைது செய்யப்பட்டார். 


நைஜீரியா பெண் கைது இதேபோல் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டை சேர்ந்த லிடிசா (30) என்ற பெண்ணின் பையில் 2 கிலோ 800 கிராம் ஹெராயின் போதை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடி 80 லட்சம். இதனையடுத்து லிடிசாவை கைது செய்த போலீசார் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். 

இரண்டு பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, March 12, 2013

தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார் ஜின்னா: ஜஸ்வந்த் சிங்

புதுதில்லி: 



இந்திய மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் முஹம்மது அலி ஜின்னா என்று கருத்து தெரிவித்துள்ளார் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்.


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி வீரர், பாகிஸ்தானை நிர்மாணித்தவர், அந்நாட்டின் தந்தை என்று பல பெருமைகளை பெற்றவர் மறைந்த ஜின்னா.


ஜஸ்வந்த் சிங் எழுதியுள்ள ''ஜின்னா-சுதந்திர இந்தியா பிரிவினை'' என்ற நூல், தில்லியில் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியது:

மகாத்மா காந்தியால் உயர்ந்த மனிதர் என்று பாராட்டப்பட்டவர் ஜின்னா.


அவர் மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். சுதந்திர இந்தியாவை பிரிவினைப்படுத்தியவர் ஜின்னா என்ற தவறான கருத்துகள் இன்னமும் இருக்கின்றன.


அதைபோலவே இந்துக்களுக்கு அவர் எதிரானவர் என்ற தவறான எண்ணமும் உள்ளது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது.

அவர் மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். மிகச் சிறந்த இந்தியர்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, உயர் அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி ஒருங்கிணைந்த இந்தியாவில் அமையவேண்டும் என்று விரும்பினார். அதுதான் அவர் விரும்பிய இந்தியாவாகவும் இருந்தது.

ஆனால் முஹம்மது அலீ ஜின்னா, கூட்டு அதிகார ஆட்சி முறையை விரும்பினார். அதை மகாத்மா காந்தியும் கூட ஏற்றுக் கொண்டார். ஆனால் நேருவுக்கு இதில் உடன்பாடு கிடையாது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் 1947ம் ஆண்டு வரை நேரு இதே நிலையைத்தான் கொண்டிருந்தார்.

அப்போது காங்கிரஸ் மட்டும் கூட்டு அதிகாரப் பகிர்வு கொண்ட ஆட்சி முறைக்கு ஒப்புக் கொண்டிருந்தால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை நாம் அடைந்திருப்போம்.


ஆனால் ஜவகர்லால் நேரு அதிக அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி முறையை விரும்பியதால்தான் பிரச்சினையே ஏற்பட்டது. நேருவுக்கு பதிலாக, மகாத்மா காந்தி, ராஜாஜி அல்லது ஆசாத் ஆகியோர் இது குறித்து இறுதி முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் ஒருங்கிணைந்த இந்தியாவை நாம் அடைந்திருப்போம் என்றே நான் நம்புகிறேன்.

முஹம்மது அலீ ஜின்னாவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு கிடையாது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது. அவருக்கு காங்கிரசின் கொள்கைகளில்தான் கருத்து வேறுபாடு இருந்தது. மற்றபடி இந்துக்கள் மீது அவர் வெறுப்பு கொண்டிருக்கவில்லை.

எனவே, பிரிவினையை ஏற்படுத்திய வில்லனாக முஹம்மது அலீ ஜின்னாவை கருதக் கூடாது. தவிர, பிரிவினைக்கான முதன்மையான காரண கர்த்தாவும் அவர் அல்ல. மேற்கண்டவாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஜவகர்லால் நேரு அதிக அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி முறையை விரும்பியதால்தான் பிரிவினை கோரினார் ஜின்னா.

பிரிவினையை அவர் கோரினாலும் மகாத்மா காந்தி, ராஜாஜி, மெற்லானா அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களால் நிறைவாக முடிவு செய்யப்பட்டே பிரிவினை அளிக்கப்பட்டது.

 


பிரிவினையின்போது இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் அன்னியர்களாக பார்க்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த மன வலியுடன் இதை தாங்கி கொண்டனர். இருப்பினும், இந்தியாவின் ஒற்றுமைக்காக அவர்கள் குறிப்பிடும்படியாக செயல்பட்டனர் என்றார்.

 

"ஜின்னா பற்றிய கருத்துகள் என்னுடைய சொந்த கருத்துகள் தான். கட்சியின் கருத்து அல்ல. ஜின்னாவை பற்றிய நூலை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நான் எழுதவில்லை.

இந்தியனாக இருந்தே எழுதியுள்ளேன். இது எனது கட்சியின் ஆவணமல்ல.

நான் இவ்வாறு புத்தகம் வெளியிடுவது கட்சிக்கு தெரியும்' என்றார் ஜஸ்வந்த் சிங.


இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேருவும், காங்கிரசும்தான் முக்கிய காரணம் என்று ஜஸ்வந்த் சிங் கூறியிருப்பதால் புதிய அரசியல் சர்ச்சை உருவாகி இருக்கிறது.