இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் ஒரே சட்டம் வேண்டும், இந்துக்கள், முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் என ஆளாளுக்கு ஒரு சட்டம் என்றில்லாமல் " பொது சிவில் சட்டம் " வேண்டும் என்று தம்பட்டம் அடிக்கும் நாம் உண்மையை சற்று சிந்திக்க வேண்டும்.
ஆடை அணிந்திருக்கும் ஒருவனுக்கு புத்தாடை வழங்குவது சிறந்ததா ? அல்லது ஆடையில்லாமல் இருக்கும் ஒருவருக்கு ஆடை அணிவிப்பது சிறந்ததா ?
விருந்தோம்பல் என்ற பெயரில் வகை வகையாக உண்ணும் பணக்காரர்களை விருந்திற்கு அழைத்து விட்டு, உண்ண உணவில்லாமல் வாடும் வரியவர்கள் வந்தால் விரட்டுவது போல்தான் உண்மையில் இந்த "பொது சிவில் சட்டம் " உள்ளது.
முதலில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நிலைக்கு வந்து விட்டு அதற்கு பிறகு அவர்கள் அனைவருக்கு சிவில் சட்டங்களை வகுக்க வேண்டும், அப்படி பார்த்தால் இஸ்லாத்தை தவிர வேறு எந்த மதத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் இல்லை.
வணங்கும் கடவுளில் முதலில் ஏற்றத் தாழ்வுகளை நீக்க வேண்டும், உண்மையில் நமது ஹிந்து இயக்கங்கள் நம் நலனுக்காக பாடுபடுகின்றனவா ? என்பதை பார்ப்போம், அனைவரும் சமம் என்று சொல்லி சட்டம் இயற்ற சொல்லும் நாம் முதலில் எப்படி இருக்கிறோம் என்றால், நமக்குள் முதலில் பொதுவான சிவில் சட்டம் முறைபடுத்தபட வேண்டும் என்று சொல்லும் அளவிற்குத்தான் நமது நிலை உள்ளது. நமக்குள் பொதுவான சட்டம் என்றால் என்ன ?
1] அனைத்து இந்துக்களும் எந்த கோவிளுக்கும் செல்லலாம் அவர்களை தடுக்கக் கூடாது
2] அவர்களை தடுத்து நிறுத்தினால் பி.ஜே.பி அல்லது சிவசேனா அல்லது இந்து முன்னனி சார்பில், தங்களுடைய தலைமையில் தடையை உடைத்து உள்ளே தலித்துகளை அழைத்து செல்ல வேண்டும்
3] முதலில் வருபவர்கே முதலுரிமை பார்பணரானாலும் வரிசையில் வந்தே நிற்க வேண்டும்
4] எங்களுக்குள் பிளவு இல்லை. பார்ப்பணர் மகளை தலித் திருமணம் செய்யலாம், அல்லது தலித் மகளை உயர் சாதியினர் திருமணம் செய்யலாம்
5] எங்களுக்குள் பேதம் ஏதும் இல்லை, தலித் அர்ச்சகராக நியமித்து பிராமணர்கள் பூஜை செய்ய தயார்
6] எங்களுடைய இயக்கங்களிலும், கட்சிகளிலும் தலித்களுக்கு அனைத்து மட்ட அளவிலும் பொறுப்புகளும், பதவிகளும் வழங்கப்படும்
7] எந்த ஒரு பிரச்சனையிலும் தலித்துகளை மட்டும் களத்தில் இறக்கிவிடாமல், மேல் சாதியினர் இறங்கி களப்பணி செய்து தலித்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம்
8] மேல் சாதியினர் இறந்தால் அவர்களுக்கு செய்யும் ஈம காரியத்தில் தாழ்த்தப்பட்டோரும் பங்கேற்கலாம்
9] மேல் சதியினரும், கீழ் சாதியினரும் சரிக்கு சமமாக இருக்கைகளில் அமரலாம்
நான் மேலே குறிப்பிட்ட விசயங்கள் மிகச் சிலவே இந்த போல் ஆயிரம் உள்ளது, முதலில் ஹிந்துக்களாகிய நமக்குள் முதலில் ஒரே மாதிரியான சட்டத்தை வகுப்போம், அதற்கு பிறகு அனைவருக்கும் சேர்த்து ஒரே சட்டம் கொண்டு வர முயற்சி செய்வோம்.
முஸ்லிம்கள் ஒரு தாழ்த்தப்பட்டவன் இஸ்லாத்தில் இணைந்தால் அவனை இமாமாக ஏற்று தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். இஸ்லாத்தில் இணைந்தவர்களுடன் தோழோடு தோழ் தழுவுகிறார்கள். பெண் கொடுத்து, பெண் எடுக்கிறார்கள், ஆனால் நாம் அப்படி செய்கிறோமா ?
ஆடை அணிந்திருக்கும் ஒருவனுக்கு ஏன் புத்தாடை வாங்கி கொடுக்க ஆவல் காட்ட வேண்டும், அவனுடைய மதத்தில் ஏற்றத் தாழ்வு இல்லையே!
மாறாக ஆடை இல்லாமல் இருக்கும் ஒருவனுக்கு ஆடை அணிவிக்க நாம் முனைவதே கிடையாது, தாழ்ந்த ஜாதி மக்களை உயர் ஜாதி மக்கள் ஏளனமாக நினைப்பதும், பெண் கொடுக்க மறுப்பதும், மிருகத்தை விட கேவலமாக நினைப்பதும் எந்த வையில் நியாயம் ?
ஆனால், மதக்கலவரங்கள் மற்றும் ஹிந்து மாநாடு போன்றவைகளில் மட்டும் நாம் தாழ்த்தப்பட்டோரை தவறாது உபயோகிக்கிறோம், ஆக நாம் செய்வது சுயநல அரசியலா ? பொது நலம் என்றால், நம் தலைமையில் இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்ற தொடர் போராட்டங்கள் அறிவித்தால் என்ன ? நாம் ஏன் தயங்குகிறோம், உயர் சாதி வர்க்கம் ஒட்டாது என்பதாலா ?
அல்லது தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் உயர் சாதியினர் என்பதாலா?
மனமிருந்தால் மட்டுமே மார்க்கம் உண்டாகும்!




.jpg)




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.