Wednesday, February 27, 2013

போலிச் சாமியார்கள் புதையல்களை போலா ?



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு தொடங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய நிறுவனர் பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார்.

இவர்கள் லஞ்சம் கொடுக்க முயன்றபோது, பொறி வைத்து பிடித்தது சி.பி.ஐ. விபரங்களை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.

சி.பி.ஐ., இந்த லஞ்ச விவகாரத்தில் லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன்கள் செந்தில், அன்பழகன் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சம்மன் அனுப்பியது. கைதாவதை தடுக்க லட்சுமி உள்ளிட்ட மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர். சுப்பையா, மனுதாரர்கள் 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், மனுதாரர்கள் 3 பேரும் சம்பந்தப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் மார்ச் 15-ம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

http://viruvirupu.com/2013/01/08/43636/ 

இப்படியே சாமியார்கள் என்ற பெயரில் செக்ஸ் புகார்களும், லஞ்ச பின்னனியும், கொலைக் குற்றமும், வரி ஏய்ப்பும், நில அபகரிப்பும் பெருகி கொண்டே சென்றால், பராசக்தி பட வசனம் போல், கோவில்கள் கொல்லையடிக்கும், கொலைக் கூடாரங்களாக மாறிவிடும் போலிருக்கிறது.





கருவறைகளை படுக்கை அறைகளாக மாற்றிய காஞ்சி சுவாமிகள் தேவநாதன், சங்கராச்சாரியார் நித்தியானந்தா போன்றோரை இன்னும் வழிபடும் மக்கள் உள்ளனர். அரசியல் வாதிகள் போல் தங்கள் வாரிசுகளை நியமிக்கும் நிலை மேல் மருவத்தூர் போன்ற பங்காரு அடிகளார் செய்கின்றனர்.

பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, நாம் ஏமாறவும் அளவில்லை. ஆக மொத்தத்தில் போலி பக்தி பரப்பி காசு பறிக்கும் தந்திரத்தை ஹிந்து சாமியார்கள் கண்டு கொண்டார்கள். நிவாரணம் கிடைக்கும் என்று செல்லும் பக்தைகளை நிர்வாணம் படுத்துகிறார்கள்.

தீர்வு தேடி செல்பவர்களிடம் காசு பறித்து தேவைக்கு அதிகமாக சொத்தும் சேர்த்து கொள்கிறார்கள், இந்து மக்களே உஷார், இவர்களை போன்றோரை அம்பலப்படுத்தவோ அல்லது விரட்டி அடிக்கவோ இந்து இயக்கங்கள் இன்னும் தயார் இல்லை. ஏன் என்றால் இவர்கள் வெளியில் செய்வதை சாமியார்கள் கோவில், ஆசிரமத்தில் செய்வதால் தட்டி கேட்க பயம். எப்படி இருக்கையில் எப்படி இந்துக்களை காப்பார்கள் என்பது இறைவன் மட்டுமே அறிந்த ஒன்று 

சாமிகள் அடுத்தவர் பிரச்சினையை தீர்க்க தெரிகிறது, அந்த சக்தியை பயன்படுத்தி தன்னுடைய காரியத்தை சாதிக்காமல், இப்படி முன் ஜாமின் ஏன் ? இப்போதாவது உணருங்கள் மக்களே! இவர்களும் நம்மை போன்றோரே! மனிதன் என்றுமே மனிதன் தான், இவனிடம் சென்று பணத்தை வீண் விரயம் செய்யாமல், சுதாரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.