Monday, February 25, 2013

புனித குளியலா ? பெண்கள் படையலா ?


இந்துக்களின் கலாச்சாரத்தை பாழ்படுத்த லவ் முஜாஹிதீன் வருகிறது என்றெல்லாம் நான் பரப்பி வரும் இந்த வேலையில் இப்படி நமது ஹிந்து சகோதரர்கள்தான் நமக்கு முதல் எதிரி என்னும் நிலையை எடுக்க நினைக்கும் அளவிற்கு நமது செயல் உள்ளது.

கங்கையில் புனித நீராடி பாவங்களை போக்கி புன்னியம் தேடி வந்த பெண் பக்தைகளின் மானம் இப்படி காற்றில் பறக்கடிக்கப்படுகிறதே என்று நினைக்கும் போது மனம் குமுறுகிறது.





கோவில்களும், புனித ஸ்தலங்களும் மக்களின் நம்பிக்கை வளர்க்கும் என்ற நிலை மாறி கற்பை சூரையாடும் இடமாகவும், பெண்களின் மானத்தை கேள்விகுறியாக்கும் காலமாக மாறிவிட்டது.








காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கோவில் கறுவரையிலேயே வைத்து பல குடும்பத்து பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தார் என்று சொன்னால், நித்தியானதா பெண் சீடர்களை தனக்கு இறையாக்கி கொண்டதும், நடிகை ரஞ்சிதாவை உடல் இச்சைக்கு பயன்படுத்தி வருவதும் வெட்ட வெளிச்சாமாகி நாட்டையே உலுக்கியது.





இப்படி பல துயரங்கள் பிரேமானந்தா முதல் சதுர்வேதி ஸ்வாமிகள் வரை அனைவரும் இந்து மத கொள்கையை கேலி கூத்தாக்கிட, இந்த வேதனைகளே நமக்கு ஆறா வடுவாக வளம் வர,



காசி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் பெண்கள் புனித நீராடுவதையும் இப்படி படமெடுத்து பகிரங்கப்படுத்தி பணம் பார்க்கும் நமது சொந்தங்களை என்ன சொல்வது. இங்கே மாற்று மத மக்கள் வர வாய்ப்பில்லாமல் இருக்க, நமது சகோதரர்களே இப்படி பெண்கள் குளிக்கும் போதும், ஆடைகள் நழுவும் போதும் படமெடுத்து பரப்பினால், உண்மையில் பக்தியோடு வந்து செல்லும் பெண்களின் மனது என்ன பாடுபடும்.



அல்லது அவர்களின் குடும்பத்தார்தான் பார்த்தால் என்ன நினைப்பார்கள், இதற்கு எல்லாம் நாம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தால் என்ன ?

இந்து மதத்தை இந்துக்களே கொச்சைப் படுத்தினால் எப்படி பெண்கள் கோவில்களுக்கும், புனித ஸ்தல்ங்களுக்கும் வர முனைவார்கள். 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.