Monday, February 25, 2013

சேது சமுத்திர சதித்திட்டம், சதிசெய்வது யார் ?




சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தொழில் வளம் பெருகும். அன்னிய செலாவணி அதிகரிக்கும். கப்பலின் பயணத் தொலைவு வெகுவாகக் குறையும். இந்தத் திட்டம் வேகமாக முன்னேற்றம் அடைந்துகொண்டிருந்த நேரத்தில் மதவாதச் சக்திகள் எப்படியும் அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்னை எடுத்துச் சென்றனர். 




உச்ச நீதிமன்றம் விரைவில் இது தொடர்பாக நல்ல முடிவெடுத்து தீர்ப்பளிப்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நல்ல தீர்ப்பினைப் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் ராமர் என்பதே கற்பனை இதில் ராமர் பாலம் எங்கிருந்து வந்தது என்றும் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

விஸ்வரூபம் படம் எதிர்க்கப்பட்ட போது 100 கோடி செலவு செய்துவிட்டு நிற்கதியாய் நிக்கிறார் கமல், அந்த 100 கோடியை யார் தருவார் என்று அனைவரும் குரல் எழுப்பினோம், 

ஆனால் 800 கோடியை சேது சமுத்திர திட்டத்தில் கொட்டி விட்டு செய்வதறியாது நிற்பதாக கூறுகிறது மத்திய காங்கிரஸ் அரசு என்று கூறியுள்ளார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 

அதற்கு நமது பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கூறுகையில் :

சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்போம் அதனை அனுமதிக்க முடியாது, ராமர் பாலத்திற்கு ஏதேனும் சேதம் என்றால் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம் என்றார். 

அதற்கு மத்திய அரசு 800 கோடி செலவு செய்துள்ளதே என்று ஒரு நிரூபர் கேட்டதற்கு, அதைப் பற்றி கவலை இல்லை என்றார், இந்துக்களின் மனதை புண்படுத்து செயலை அணுமதிக்க முடியாது என கூறினார். 800 கோடி செலவு செய்வதற்கு முன்பே அரசு ஏன் சிந்திக்கவில்லை என்றும் பதிலளித்தார்

100 கோடி பணத்தை ஒரு சமுதாயத்தின் தன்மானத்தை காக்க இரையாக்க கூடாது என்று பா.ஜ.க. தமிழக தலைவர் பொன்.ராதகிருஷ்ணண் சொன்னார், ஹிந்து இயக்கங்களும் அதையேதான் சொன்னது, ஆனால் இப்போது ஏன் 800 கோடி, இந்திய மக்களின் பணத்தை வீணடிக்க முன்வருகிறது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கேட்கிறார்.

இந்தியா இந்துக்களின் நாடு, எங்கள் பணம் எங்களுக்காக வீணாவதை கொண்டு எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, தென்னிந்தியாவிற்கு வர்த்தகம் பெருகினால் என்ன ? குறைந்தால் எங்களுக்கு என்ன ?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.