ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிகழ்ந்திருக்கும் தற்போதைய இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர். பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர்.
தற்போது போலவே முதலில் ஹூஜி தீவிரவாத இயக்கம் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் தேசியப் புலனாய்வு முகாமையகம் இந்து தீவிரவாத இயக்கத்தினர் 6 பேரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்தது.
பஜ்ரங்கதள் தலைவர்களுடன் பயங்கரவாதி அஸிமானந்தா
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பல்லாண்டுகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசும் அவ்வப்போது உறுதிமொழிகளை கொடுப்பதும் பின்னர் பின்வாங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 'தெலுங்கானா யுவசேனா' மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரால் தெலுங்கானா பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் இனியும் மத்திய அரசை நம்பி பயனில்லை.. ஆயுத வழிப் போராட்டம் மூலமே தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வென்றெடுப்போம் என்று எச்சரித்திருந்தனர். மேலும் ஹைதராபாத் என்பது தெலுங்கானாவின் தலைநகராகத்தான் இருக்க வேண்டும். என்று தெலுங்கானா வலியுறுத்துவோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் வாழும் இதர ஆந்திர பகுதியினரை அச்சுறுத்தக் கூடும் வகையில் அல்லது வெளியேற்ற வைக்கும் வகையில் தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தினர் இப்படி ஒரு நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் ஆந்திர மாநில உளவுத்துறையிடம் இருக்கிறது.


.jpg)

.jpg)
.jpg)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.