Monday, February 25, 2013

ஐதராபாத் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்-ஸா ?

நாட்டையே உளுக்கிய ஐதராபாத் குண்டு வெடிப்பில் பலர் பலவாறு கருத்து தெரிவித்து வரும் இந்த வேளையில் ஊடகத்துறை தலைவரான மார்கண்டேய கட்ஜூ ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்,




ஏற்கனவே நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குடு வெடிப்பு, மும்பை குண்டு வெடிப்புகளைப் போன்று இந்த குண்டு வெடிப்பிலும் இந்து பயங்கரவாதம் தொடர்பு கொண்டிருப்பதாக தாம் சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.

எல்லா குண்டு வெடிப்புகளைப் போன்றே இதிலும் முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டப்படுகின்றன, ஆனால் முந்தைய வழக்குகள் போல் இதிலும் சங்பரிவாரம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் இதனை உண்மை படுத்தும் விதமாக ஆந்திர காவல்துறை உயர் அதிகாரியும் இதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்மந்தம் இல்லை, இவை ஊடகம் செய்யும் எச்ச காரியம் என பேட்டியளித்துள்ளார்.




அவரது பேட்டி :

ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அனுரக் சர்மா, “அவரை சந்தேக நபராக நாம் பார்க்கவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த மற்றையவர்களிடம் வாக்குமூலம் பெறுவது போலவே, இவரிடமும் வாக்குமூலம் பெற்றிருக்கிறோம். அவ்வளவுதான். இவரிடம் எடுக்கப்பட்டது ‘சாட்சி வாக்குமூலம்’ மட்டுமே. அவரை போலீஸ் ‘கிரில்’ பண்ணுகிறது என வெளியான தகவல்கள் உண்மை கிடையாது. அவருக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு கிடையாது என போலீஸ் நம்புகிறது” என்று சற்றுமுன் பி.டி.ஐ. செய்தி ஏஜென்சிக்கு தெரிவித்தார்.



அந்த நபர்மீது எமக்கு சந்தேகம் இல்லை” என்று கூறியிருக்கிறது ஹைதராபாத் போலீஸ்.

அப்துல் வாசேய் மிஸ்ரா (மேலே போட்டோவில் உள்ளவர்) என்ற பெயருடைய 23 வயதான வேலையற்ற இந்த இளைஞன், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயமடைந்தவர். அவரது போதாத காலம், 5 ஆண்டுகளின்பின் ஹைதராபாத்தில் குண்டு வெடித்த நேரத்தில், குண்டுவெடித்த இடத்தில் நின்று, படுகாயமடைந்துள்ளார்.
தற்போது, மலக்பேட்டில் உள்ள யஷ்கோடா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்.

இவர் சந்தேக நபராக இருக்கலாம் என மீடியாக்கள் பிளாஷ் நியூஸ் போட்டது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அனுரக் சர்மா இவ்வாறு கருத்து கூறியுள்ளார்



ஹெலிகாப்டர் ஊழல் செய்தியை இருட்டடிப்பு செய்யக்கூட ஆளும் கட்சி இந்த வேலையை தங்கள் கட்சி ஆளும் மாநிலத்தில் சுலபமாக அரங்கேற்றி இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும், பெறுகி வரும் தெலுங்கானா போராட்டத்தை முடக்க மத்திய அரசு செய்த ராஜதந்திரமாகவும் தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்களே! உஷார், இந்துக்களாகிய நம்மை காப்பதாக சொல்லும் ஆர்.எஸ்.எஸ் ஸும் நம்மைதான் சாகடிக்கிறது, காங்கிரஸூம் நம்மைதான் காவு வாங்குகிறது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.