Wednesday, February 27, 2013

என்று தனியும் வரதட்சினை மோகம்


வாணியம்பாடி, பிப்.27-

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சீனி என்கிற சுதாகர் (வயது 24). இவருக்கும் ராமநாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் கோமதி (21)க்கும் கடந்த ஒருவருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. 

பி.ஏ. பட்டதாரியான கோமதியின் திருமணத்தின் போது பெற்றோர்கள் தேவையான சீர், வரிசைகள் கொடுத்துள்ளனர்.

கணவனும், மனைவியும் ஒரு மாதம் சந்தோஷமாக குடும்பம் நடத்தினர். பின்னர் சுதாகர் வீட்டில் கூடுதலாக வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கோமதியை கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

 இதற்கிடையே கடந்த வாரம் தேங்காய் மண்டி வைக்க ரூ.2 லட்சம் வாங்கி வரச்சொல்லி கோமதியை, அவரது கணவன் சுதாகர், மாமியார் தமிழ்செல்வி, நாத்தனார் கல்பனா ஆகியோர் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

எனினும் கோமதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி தர மாட்டேன் என உறுதியாக இருந்ததாக தெரிகிறது.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கோமதிக்கு உடல்நிலை சரியில்லாததால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டுள்ளதாக அவரது சித்தி சகுந்தலாவுக்கு போன் மூலம் சுதாகர் கூறியுள்ளார்.

அங்கு வந்து சகுந்தலா பார்த்த போது அவரிடம், டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோமதியை கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு கொண்டு சொல்லும்படி கூறினர். அதன்படி கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

கோமதி இறப்பதற்கு முன் தனது சித்தியிடம் என் கணவன், மாமியார், நாத்தனார் ஆகியோர் வலுக்கட்டாயமாக ஒரு பாட்டிலில் இருந்து ஆசிட்டை குடிக்க வைத்ததாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கோமதியின் தாயார் ரேவதி அம்பலூர் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில் கோமதியை அவரது கணவர், மாமியார், நாத்தனார் ஆகியோர் ஆசிட்டை குடிக்க வைத்துள்ளனர். எனவே ஆசிட் ஊற்றி கொலை செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 அதன்பேரில் வாணியம்பாடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், அம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் வாசகி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 1 ஆண்டே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் உதவி கலெக்டர் ஷில்பா பிரபாகர், கோமதியின் கணவர் சுதாகர், மாமியார் தமிழ்செல்வி, நாத்தனார் கல்பனா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் இந்த கொடுமை இல்லை, ஆசிட் வீச்சும், கேஸ் சிலிண்டர் வெடிப்பதும், வரதட்சினை கொடுமையினால் பெண்கள் அனுதினம் சாகடிக்கப்படுவது நமது மதத்தில் சர்வ்சாதாரணம் ஆகிவிட்டது. பெண்களுக்கு எதிராக முஸ்லிம்கள் பர்தா அணிய சொல்லி கொடுமை செய்கிறார்கள் என்று பரப்பும் நான் ஏன் இப்படி சம்பாதிக்க வக்கில்லாமல் கையாளாகா தனமாக மாமியார் வீட்டு பணத்தில் வாழ பெண்களை கொல்ல வேண்டும். பெண்களை இப்படி கை பொம்மைகளாக நினைக்கும் சிந்தனையை நாம் மாற்ற வேண்டும்.

பெண்களே விழித்தெழுங்கள், உங்கள் வாழ்க்கை உங்கள் கையில், வரதட்சினை கேட்டால் ஹிந்துக்களை மணக்க மாட்டோம் மாறாக மஹர் என்னும் மணக்கொடையை பெண்களுக்கு வழங்கி வாழ்க்கை நடத்தும் இஸ்லாமியர்களை திருமணம் செய்து கொள்வோம் என்று அறிவிப்பு கொடுத்து பாருங்கள், தானாக மாற்றம் தேடி வரும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.