Monday, February 25, 2013

போதைப்பொருள் கடத்திய ராணுவ அதிகாரி கைது !

இம்பாலில் ரூ.16 கோடி மதிப்புடைய போதைப்பொருட்களை கடத்த முயன்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர், இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்பாளர்.

இந்திய ராணுவத்தின் பி.ஆர்.ஓ. (Public Relations Officer) லெப்டினென்ட் அஜய் சௌத்ரியுடன் கைது செய்யப்பட்ட மற்றைய 6 பேரில் ஒருவர், இவருக்கு கீழ் பணிபுரியும் ஜவான். இவர்கள் 3 வாகனங்களில் போதைப்பொருளை ஏற்றிக்கொண்டு மூரா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சிக்கிக் கொண்டனர்.

மூரா பகுதியில் இருந்து, எல்லையைக் கடந்தால் மியன்மார் நாட்டை அடையலாம்.


முஸ்லிம்களை ராணுவத்தில் சேர்த்தால் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில்தான், முஸ்லிம்கள் ராணுவத்தில் சேர்ப்பது முடிந்த அளவு தவிர்க்கப்படுகிறது, குறிப்பாக எல்லைப்பகுதிகளில் அறவே தவிர்க்கப்படுகிறார்கள்.

ஆனால், இந்துக்களாகிய நான் இந்திய தேசத்தை காப்பதற்கு பதிலாக ஒரு முஸ்லிம் எதை செய்வானென்று நாமாக கற்பனை செய்தோமோ அதைவிட ஒருபடி மேலே செய்து கொண்டிருக்கிறோம், கேவலம் பணத்திற்காகவும், வசதியான வாழ்விற்காகவும்.

பாராளுமன்ற தாக்குதலில் அப்சல் குரு ஈடுபட்டதாக நேரடி சாட்சி இல்லையென்றாலும், அந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாராளுன்ற உள் வரைபடத்தை கொடுத்து உதவியது மனோகர் என்ற ஒரு ஹிந்துதான்.

மாலேகான் குண்டு வெடிப்பில் தக்க சாட்சியங்களுடன் கையும் களவுமாக பிடிபட்ட சாமியார் அஸிமானந்தா மற்றும் பிரக்யா சிங் இன்னும் 2 ராணுவ அதிகாரிகளும் என அனைவருமே ஹிந்துக்கள், இவர்கள் பிடிபட்டதால் நம் மதத்துக்கே அவமானம்.





இன்னும் மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப்-பை தூக்கில் போட்டதை கொண்டாடும் நான் ஏன், அவர்களை உள்ளே விட்ட, நம்மை காப்பார்கள் என்று நினைத்து ஏமாந்த ஹிந்து பாதுகாப்பு படை வீரர்களை கூண்டிலேற்ற குரல் கொடுக்கவில்லை.

நம் தேசம் நம் மக்கள் என்று சொல்லி நாமே இப்படி இந்த நாட்டிற்கு துரோகம் செய்வதை பற்றி ஏன் நாம் சிந்திக்க மறுக்கிறோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.